டிடி நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. எல்லாத்துக்கும் காரணம் இது! குடும்ப ரகசியத்தை உடைத்த பிரியதர்ஷினி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி, தொகுப்பாளர் டிடியின் அக்கா என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில் பிரியதர்ஷினி தன்னுடைய தங்கை டிடி குறித்து பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் டிடிக்கு நடந்தது போல வேறு யாருக்காவது நடந்திருந்தால் டிடி போல அவர்களால் வெளியே வந்திருக்க முடியுமான்னு தெரியல என்று பிரியதர்ஷினி சொல்லி இருக்கிறார்.
டிடிக்கு ஏற்கனவே விவாகரத்து பிரச்சனை ஒரு பக்கம் இருக்கும் நிலையில் உடல்நல பிரச்சனையும் பெரிய அளவில் அவரை மிரட்டுகிறது. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதில் இருந்து தைரியமாக வெளியே வந்த டிடி குறித்து இணையத்திலும் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பிரியதர்ஷினி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் பிரியதர்ஷினி பேசும்போது நம்மைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வருவதை நம்மால் என்ன செய்ய முடியும் சொல்லுங்க? நெகட்டிவ் கமெண்ட் போடுவது அவர்களுடைய மனநிலையை சார்ந்தது. அது நம்மை சார்ந்தது கிடையாது. ஆனால் அதற்கு பதிலுக்கு பதில் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருப்பது தேவையில்லாத வேலை. அதுபோல மிகவும் பாசிட்டிவான கமாண்டுகளும் இணையத்தில் இருக்கத்தான் செய்கிறது.
அதனால் நீங்கள் உங்களுடைய வேலையில் கவனத்தை செலுத்தணும். அதுபோல டிடிக்கு அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது. அது போதாத குறைக்கு அவளுடைய காலிலும் பிரச்சனை இருக்கிறது. ஆனாலும் டிடி தொடர்ந்து தன்னுடைய வேலைகளை செய்து கொண்டே தான் இருக்கிறார். உண்மையில் டிடி செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய விஷயம்.
ஏன்னா டிடிக்கு நடந்த மாதிரி எங்க குடும்பத்தில் அவளை தவிர வேற யாருக்காவது நடந்திருந்தால் அவர்கள் டிடி போல தொடர்ந்து முன்னேறி இருப்பார்களா என்று தெரியவில்லை. டிடி தன்னுடைய துன்பத்தில் இருந்து எப்படி மீண்டு எழுந்தார் என்று சொல்ல முடியாது. அவர் அதை ஒவ்வொரு நாளும் மிகவும் சிரமப்பட்டு கையாண்டு வருகிறார்.
அதுபோல நமக்கு சில பிரச்சனைகள் நடக்கும் போது அதை நாம் கையாளுகிற விதம் நம்முடைய கையில் தான் இருக்கிறது. அது டிடி உடைய விஷயத்தில் தெரிகிறது. அவள் செய்வது அவருக்கு மட்டுமில்லாமல் பிறருக்கும் பயன்படுகிறது. டி.டி எல்லா விதத்திலும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்.
அது சந்தோஷமான விஷயம் மட்டுமல்லாமல் மரியாதைக்குரிய விஷயம் தான் என்று தன்னுடைய தங்கை குறித்து பிரியதர்ஷினி பேசியிருக்கிறார். அதோடு டிடிக்கு அடுத்த திருமணம் எப்போது என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவருடைய மனம் சார்ந்தது அதை நாங்கள் கட்டாயப்படுத்தி இதை செய் என்று சொல்ல முடியாது.
அதுபோல டிடி வெளியே செல்லும்போது என்னுடைய மகன் கூட செல்லும்போது கூட சிலர் டிடி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார், அவர் இவர் தான் என்று புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்கள். என்னுடைய மகனோடு டிடி இருக்கும் புகைப்படத்தையும் இவர்கள் இப்படி எல்லாம் பயன்படுத்தி வருவதை பார்க்கும் போது கடுப்பாகத்தான் இருக்கிறது.

ஏதாவது நல்ல விஷயம் என்றால் நாங்களே சொல்லுவோம் ஆனால் இல்லாததை இருக்கிறது என்பது போல இணையத்தில் பல விஷயங்கள் பரவி வருகிறது. அதை நினைத்து நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதால் நாங்கள் அதை ஒதுக்கி வைத்து விட்டோம் என்று பிரியதர்ஷினி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications