லைக் குறைந்தால் ஆடை குறைவது நிற்கும்! தெருவில் பெண்களை தப்பா! ஆபாச இன்புளுயன்ஸர்களை விமர்சித்த ரச்சிதா
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடை போடும் பெண்களுக்காக இளைஞர்கள் லைக் போடுவது குறைந்தால் அரைகுறை ஆடை போடுபவர்கள் குறைவார்கள் என்று ஆபாச இன்புளுயன்ஸர்களை விமர்சித்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த எக்ஸ்ட்ரீம் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ரச்சிதா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சமூக வலைத்தளத்தில் சிலர் பிரபலமாக வேண்டும் என்று அரைகுறை ஆடை போட்டு ஆபாச வீடியோக்கள் வெளியிடுகிறார்களே அது பற்றி உங்க கருத்து என்ன என்று கேட்டதற்கு அது அவர்களுடைய விருப்பம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அவர்களுடைய உடை குறைத்து, அவர்கள் தங்கள் பிரபலமாகி கொள்ள வேண்டும் என்று அவர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு போடும் போஸ்ட்களால் சாதாரண பெண்களையும் பாதிக்கிறது. தாங்கள் பிரபலமாக வேண்டும் என்று சிலர் ஆபாசமாக உடை அணிகிறார்கள் அந்த வீடியோவை பார்ப்பவர்கள் வீடியோ போட்டவர்களை எதுவும் செய்ய முடியாது என்பதால் தெருவில் போகும் பெண்கள் மீது அவர்களுடைய தவறான பார்வை விழுகிறது.
அதனால் தான் பல பெண்கள் வாழ்க்கை சீரழிகிறது. ஆபாசமாக வீடியோ போடுபவர்கள் லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக போடுகிறார்கள். ஒரு வீடியோ போட்டால் லைக் அதிகரிப்பதை பார்த்ததும் இன்னும் இது போல போடலாம் என்று அவர்கள் யோசிக்கிறார்கள்.
அதனால் லைக் போடுபவர்கள் அதை கடந்து போய்விட்டால் நாம் என்ன செய்தாலும் இவர்கள் கண்டு கொள்ளவில்லையே என்று ஆபாச உடை அணிந்து வீடியோ போடுவது குறைத்து விடுவார்கள் என்று அந்த பேட்டியில் ரட்சிதா பேசி இருக்கிறார்.
இது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது காரணம் ரச்சிதா பல வீடியோக்கள் மற்றும் போஸ்டர்கள் அரைகுறை உடை போட்டு இருக்கிறார். குட்டை பாவாடை மற்றும் சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அவர் போட்ட வீடியோக்கள் கூட அதிகமான லைக்குகள் குவிந்திருக்கிறது.
அந்த போஸ்டுக்கு எல்லாம் ரசிகர்கள் அவருடைய தொடை அழகு, இடை அழகு என்று ஆபாசமாக வர்ணித்து வைத்திருக்கிறார்கள். அதனால் அடுத்தவர்களை சொல்வதற்கு முன்பு ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது பலர் கொடுக்கும் கமெண்ட் ஆக இருக்கிறது.
அதுபோல ரச்சிதாவின் வார்த்தை சரிதான் என்று சிலர் பாராட்டியும் வருகிறார்கள். தற்போது பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரச்சிதா கொடுத்த விளக்கம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications