மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா மகாலட்சுமி.. இப்படி ஒரு கேரக்டரா? இனி கலக்கல் தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக பிரபலமடைந்த நடிகை ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக கம்மிங் சூன் என்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் ரச்சிதா சீரியலுக்கு வந்ததை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வரவேற்று வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் தமிழ் சீரியலில் அறிமுகமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார். முதல் சீரியலில் கருப்பான கிராமத்து பெண்ணாக நடித்திருந்த ரச்சிதா அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சரவணன் மீனாட்சி சீரியல்களில் எல்லா சீசன்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.
அது மட்டுமல்லாமல் அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலிலும் ஜீ தமிழில் நாச்சியார் புறம், இது சொல்ல மறந்த கதை என்ற சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த நிலையில் கடைசியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல வருடங்களாக ரச்சிதா முயற்சி செய்திருந்த நிலையில் கடந்த முறை தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று என் நினைத்திருந்த ரச்சிதா பைனலுக்கு சில வாரங்களுக்கு முன்பு எலிமினேஷன் ஆகி இருந்தார்.
அதைத்தொடர்ந்து தனக்கு புதிய சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பது என்று ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலங்கைக்கு சூட்டிங் சென்று வந்த ரச்சிதா அதற்குப் பிறகு அந்த சினிமா பற்றி எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது போலீஸ் உடையில் இருக்கும் வீடியோவை பகிர்ந்து கம்மிங் சூன் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது அதிகமான வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரச்சிதா எந்த சீரியலில் நடிக்கிறார் என்ற தகவல்கள் உறுதியாக வெளியாகவில்லை. என்றாலும் இவருடைய கம்பீரமான கெட்டப் பலரை கவர்ந்திருக்கிறது. அதுபோல இவருடைய கேரக்டரின் பெயர் ஸ்ருதி என்று தெரிய வந்திருக்கிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications