நடிகை ரச்சிதா எடுத்த முக்கிய முடிவு.. நேற்று தானே “அப்படி” வீடியோ வெளியிட்டார்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் ஜீ தமிழில் புதியதாக உருவாக இருக்கும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிரிவோம் சந்திப்போம்" என்ற சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் கன்னடத்தில் ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளராக இருந்த ரச்சிதா முதல்முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமானதும் அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை இவர் செய்திருந்தார். அதாவது தொடர்ச்சியாக பல சீசன்களில் இவர்தான் மீனாட்சி ஆகவே நடித்துக் கொண்டிருந்தார். எல்லா சீரியல்களிலும் கதாநாயகி தான் மாறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கதாநாயகன் ஒருவர்தான் இருப்பார்.
ஆனால் இவருக்கு மட்டும் அதான் பல கதாநாயகர்கள் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படியான நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நடித்த சீரியல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் என்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு அந்த சீரியல் முடிவடைந்த பிறகு கலர்ஸ் தமிழில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்திருந்தார்.கதை நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.
ஆனால் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அந்த சீரியல் முடிவடைந்துவிட்டது. ஆனால் அந்த சீரியலில் முடிவு குறித்து ரசிகர்கள் எவ்வளவு ஃபீல் பண்ணினார்களோ அதைவிட ரச்சிதா ரொம்பவே ஃபீல் பண்ணி இருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டு இருந்த நிலையில் 90 நாட்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான டப்பிங் பேசும் வீடியோவை கூட நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ரச்சிதா கதறி அழுதபடி டப்பிங் பேசிய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரச்சிதா ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே ஜீ தமிழில் ரச்சிதா "நாச்சியார் புறம்" என்ற சீரியலில் நடித்திருக்கும் நிலையில் இப்போது புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார். ஆனால் ரச்சிதா நடிக்கும் சீரியல் பெயர் இன்னும் உறுதியாக வில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications