பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் என்ட்ரி.. வெளியே ரச்சிதா வெளியிட்ட திடீர் உருக்கமான பதிவு
சென்னை: விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த ரச்சிதாவின் கணவர் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைல்ட் கார்ட் என்டிரியாக அறிமுகமாகி இருக்கிறார்.

இந்த நிலையில் ரச்சிதாவின் தந்தை காலமாகி இன்றோடு 11 நாள் ஆகிறது என்று பதினோராவது நாள் வழிபாட்டில் எடுத்த புகைப்படத்தை ரச்சிதா பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அவர் முதல் முறையாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தமிழில் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல்களில் தொடர்ந்து பல சீசன்களில் மீனாட்சி ஆகவே வலம் வந்து கொண்டு இருந்தார். இந்த சீரியலில் ஒவ்வொரு சீசனுக்கும் கதாநாயகன் மாறினாலும் இவர்தான் நிரந்தர மீனாட்சி என்று ரசிகர்களின் மனதில் பதிந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ரச்சிதாவிற்கு ஜீ தமிழில் நாச்சியார் புறம், சொல்ல மறந்த கதை அதுபோல விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல முதல் சீரியலான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அவரோடு கதாநாயகனாக நடித்த தினேஷ் ரச்சிதா காதலித்து திருமணம் செய்திருந்தார்.
ஆனால் சில காலமாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தகவல் ஆரம்பத்தில் ரகசியமாக இருந்த நிலையில் இப்போது இவர்களுடைய பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போன பிறகு வெட்ட வெளிச்சமாக மாறி இருக்கிறது. ஆனால் இது குறித்து எந்த இடத்திலும் ரச்சிதா பேசவில்லை.
அதே நேரத்தில் தினேஷ் தனக்கு இப்பவும் ரச்சிதா மீது காதல் அப்படியேதான் இருக்கிறது என்பது போன்று பல இடங்களில் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரச்சிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரச்சிதா பலமுறை முயற்சி செய்திருந்ததாகவும் கடைசியில் போன சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.
ஆனால் அவர் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடைசி ஒரு வாரத்திற்கு முன்பு இவர் எலிமினேஷன் ஆகி வெளியே வந்தார். இந்த நிலையில் இந்த சீசனில் தினேஷ் வைல்ட் கார்ட் போட்டியாளராக தினேஷ் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல ரச்சிதாவிற்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தான் அவருக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் தினேஷோடு ஏற்பட்ட பிரச்சனையால் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்திருந்தார். இந்த நிலையில் இப்போது அவருடைய தந்தையும் காலமாகி இருக்கிறார். தந்தையும் திடீர் மறைவால் ரச்சிதா வேதனையில் இருக்கும் நிலையில் இன்று அவருடைய பதினோராவது நாள் சடங்கில் தன்னுடைய தந்தையின் புகைப்படத்திற்கு முன்பு தனது தாயின் கைகளை இறுக்கப்பற்றிய ரச்சிதா, "இனி நான் உனக்கு.. நீ எனக்கு.." என்று ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பலர் ரச்சிதாவிற்கு ஆறுதல் கூறி அவர் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இனியாவது ரச்சிதாவும் தினேஷும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்றும் பலர் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த தினேஷ் எனக்கும் இந்த டைட்டிலுக்கும் ஒரு எமோஷனல் இருக்கிறது. அதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications