எனக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது! அப்போ ஆண் டாக்டர்கள் செய்த செயல்! நெகிழ்ந்த நடிகை ராதா
சென்னை: நடிகை ராதா தனக்கு மூத்த மகள் கார்த்திகா பிறக்கும்போது என்ன நடந்தது என்று பேசி இருக்கிறார். தன்னுடைய முதல் பிரசவம் அரசு மருத்துவமனையில் நடந்த போது அங்கு இருந்த ஆண் டாக்டர்கள் தனக்கு கொடுத்த தைரியம் மற்றும் அன்பை எமோஷனலாக ராதா பேசியிருக்கிறார்.
குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே வரம். அது சாதாரண குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த பிரபலமாக இருந்தாலும் சரி குழந்தை பிறக்கும் போது ஒவ்வொரு பெண்ணும் மறு ஜென்மம் அடைகிறார். அதிலும் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் முகத்தை பார்க்கும் போது தாய்க்கு அளவில்லாத சந்தோசம் உருவாகும்.

அதுபோல தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் போது தான் தன்னுடைய அம்மாவின் கஷ்டத்தையும் பல பெண்கள் உணர்கிறார்கள். இதுபோல உணர்வுபூர்வமான கதையைத்தான் நடிகை ராதா விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அதில் எனக்கு முதல் குழந்தை அரசு மருத்துவமனையில் தான் பிறந்தது.
அரசு மருத்துவமனைக்கு நான் டெலிவரிக்கு போயிருந்த நேரத்தில் இப்ப இருக்கிற மாதிரி ஃபெசிலிட்டீஸ் கிடையாது. பல கர்ப்பிணிகளை ஒரே வார்டில் இருக்க வைத்திருந்தார்கள் பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் பிரசவ வலியில் கத்திக்கிட்டு இருக்காங்க. எனக்கு அதை பார்க்கும்போதே பயம் வந்துவிட்டது. ஆனால் அந்த பிரசவ வார்ட்டில் அதிகமானோர் ஆண் டாக்டர்கள் தான் இருந்தார்கள்.
அவர்கள்தான் பயப்படாதீங்க, இங்க பாருங்க என்று தைரியம் கொடுத்து கொண்டு இருந்தாங்க. அதற்கு முன்னாடி ஸ்கூல் காலேஜ் எல்லாம் படிக்கும்போது ஆண்களை பார்த்தால் நமக்கு ஒரு தயக்கம் இருக்கும் ஆனால் பிரசவ நேரத்தில் ஆண் டாக்டர்கள் எனக்கு அந்த இடத்தில் இருக்கும் போது அவர்கள் தெய்வம் போல இருந்தார்கள்.
பிரசவத்திற்கு கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. அப்போது குழந்தைக்கு கொடி சுத்திட்டிச்சி என்று சொல்லி ஆபரேஷன் பண்ணனும் என்று சொல்லிட்டாங்க. பிறகு ஆபரேஷன் செய்து முடித்ததும் குழந்தையை எடுத்து என்கிட்ட காட்டுனாங்க. அப்போ கார்த்திகா பல்லி போல நீளமா ஒல்லியா இருந்தா. பசியில வாயை சப்பிக்கிட்டு இருந்தா. அதை பார்க்கும் போது நான் நொறுங்கி போயிட்டேன்.
எந்த ஒரு அம்மாவுக்கும் தன்னுடைய குழந்தையின் முகத்தை முதல் முறையாக பார்க்கும் போது எப்படி இருக்கும் என்று எனக்கு அந்த நேரத்தில் புரிந்தது. அதுபோல அதுவரைக்கும் ஆண்கள் மீது எனக்கு இருந்த எண்ணம் என்னுடைய பிரசவ அறையில் எனக்கு முற்றிலும் மாறி போய்விட்டது என்று ராதா கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications