அரைகுறை ஆடையோடு பேச்சுலர் ரூமில் இருந்த ஆண் நபர்.. உதவி இயக்குனரின் வார்த்தை.. சீரியல் நடிகை வேதனை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ராதிகா ப்ரீத்தி தான் நடிப்பதற்காக எவ்வளவு தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியும் என்று வேதனையோடு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலில் தான் நடிக்கும் போது பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

வெளிய அவுட்டோர் ஷூட்டிங் போகும்போது பேச்சுலர் ரூமில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல் ஆக இருந்தாலும் சரி பெண்களுக்கு எங்கேயும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதே நேரத்தில் இது சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சாதாரணமாக பெண்கள் எல்லா இடங்களிலும் அனுபவித்து வருவது தான். ஆனால் ஒரு சில பிரபலங்கள் இது பற்றி தைரியமாக பேசி வருகின்றனர்.
ஒரு சிலர் இதை வெளியே சொல்வதற்கு பயந்து போய் அமைதியாக கடந்து போய் விடுகின்றனர். இந்த நிலையில் நடிகை ராதிகா ப்ரீத்தி தான் பூவே உனக்காக சீரியலில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து கொண்டு நடித்து இருந்ததாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். ஏற்கனவே பூவே உனக்காக செட்டிங் பிரம்மாண்டமாக இருந்தாலும் அங்கு ஆண்கள் பெண்கள் என்று தனியாக ஒரு பாத்ரூம் கூட கிடையாது.

எல்லோரும் ஒரே இடத்தில் தான் போக வேண்டும். அதுவும் அங்கேயே ஒரு குடும்பத்தினர் தங்கி இருந்தனர். அங்கு வயதான ஒரு தாத்தா, பாட்டி அவர்களுடைய மகனும் இருந்தனர். அவர்களும் அந்த பாத்ரூமில் தான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த பாத்ரூம் யூஸ் பண்ணி இருந்தால் அலர்ஜி ஏற்பட்டு நான் அதற்காக ட்ரீட்மென்ட் எடுத்து இருந்தேன். அது போல நாங்கள் அவுட்டோர் சூட்டிங் போனால் ரெடி ஆவதற்கு ஒரு அறை கூட அரேஞ்ச் செய்து தந்தது கிடையாது.
ஒருமுறை வெளியே அவுட்டோர் சூட்டிங் போயிருக்கும் போது ஒரு பேச்சுலர் ரூமில் ரெடியாக சொல்லி இருந்தனர். அங்கு வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நானும் அதை நம்பி உள்ளே போனேன். ஆனால் அங்கே ஒரு நபர் மேல் சட்டை எதுவும் போடாமல் ஒரு ட்ரவுசர் மட்டும் போட்டுக்கொண்டு இருந்தார். சரி நாம போயிருக்கோம்.. அவர் வெளியே போய் விடுவார் என்று பார்த்தால் அவர் அவர் பாட்டுக்கு உள்ளேயே இருக்கிறார்.

நான் அதைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டேன். அது பற்றி சீரியல் குழுவினரிடம் பேசும்போது அவர்கள் பெரிய பெரிய ஆர்டிஸ்ட்களே இதையெல்லாம் கண்டுக்காம ரெடி ஆவாங்க. ஆனால் நீ இப்பதானே வந்திருக்க இதெல்லாம் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா? இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணினால் தான் முடியும் என்று எளிதாக சொல்கிறார்கள்.
வெளியே அவுட்டோர் சூட்டிங் போகும்போது டாய்லெட்டுக்கும் அதுபோல அரேஞ்ச் செய்து தருவது கிடையாது. நாங்கள் பக்கத்தில் இருக்கும் வீடுகளின் கதவை தட்டி உங்க வீட்டு டாய்லெட்டை யூஸ் பண்ணிக்கவா? என்று கேட்டு தான் போயிட்டு வந்திருக்கிறோம். பலமுறை சிலர் எங்களை திட்டியும் அனுப்பி இருக்கிறார்கள். இந்த மாதிரி கசப்பான அனுபவங்களை நான் அங்கு சந்தித்தேன். எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் பண்ணி கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவுதான் அட்ஜஸ்ட் பண்றது என்று அந்த வீடியோவில் ராதிகா ப்ரீத்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications