விஷால் அந்த ஆளை செருப்பால அடிக்கட்டும்! நான் விளக்குமாறு எடுத்துட்டு வரேன்.. நடிகை ராதிகா கோபம்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் தனியார் செய்தி சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதற்கு தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார் அதாவது. "சமூக வலைத்தளத்தில் நடிகைகள் மீது அவதூறு பரப்பும் யூடியூபர்களை விஷால் செருப்பால் அடிப்பாரா? அவர் அப்படி செய்தால் நான் விளக்குமாறு எடுத்துட்டு வரேன்" என்று ராதிகா பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை பாலியல் தொந்தரவுகள் பற்றி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அது பற்றி பலரும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் நடிகராகவும் தமிழ் நடிகர் சங்க தலைவராகவும் இருக்கும் விஷாலிடம் இது பற்றி நேற்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருந்த நிலையில் விஷால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் அந்த இடத்திலேயே அந்த நபர்களை செருப்பை கழட்டி அடித்து விடுங்கள் என்று கூறியிருந்தார்.

இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒரு நடிகை விஷால் சொன்னது போல ஒருவரை அடித்து விட்டால் அதற்குப் பிறகு அந்த நடிகைக்கு ஏற்படும் பிரச்சனைகளை யார் பார்ப்பார்கள்? நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருக்கும் விஷால் இப்படி சொல்லலாமா? பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை சொல்லும் நடிகைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தானே தலைமையில் இருப்பவர்களின் பொறுப்பு என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து நடிகை ராதிகா சரத்குமாரிடம் தனியார் செய்தி சேனல் ஒன்றில் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அப்போது ராதிகா விஷால் பேசியது கொஞ்சம் கூட சரி கிடையாது. விஷால் ஒரு பொறுப்பில் இருக்கிறார். அவர் அதற்கு தகுந்த மாதிரி பேச வேண்டும். இன்று காலையில் நான் செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு நான்கு பேர் இருந்து ஒரு வீடியோவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் செய்தியாளர்கள் கூட கிடையாது. ஆனால் அவர்கள் நடிகைகள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று நடிகைகள் பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விஷால் போய் செருப்பால் நடிப்பாரா? அவர் அப்படி செய்தால் நான் விளக்குமாறு கொண்டுட்டு வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார்.
அது உண்மையா? பொய்யா? என்று கூட யாரும் காது கொடுத்து விசாரிக்கவில்லை. அதற்கு பிறகு சின்மயியின் நிலைமை என்ன ஆச்சி? அவருக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதே.. இதுபோல ஒருவர் ஒரு பிரச்சனையை வெளியே சொன்னால் அவருடைய வாழ்க்கையை அப்படியே முடித்து விடுகிறார்கள். தைரியமாக சொல்லுங்கள் உங்களுக்கு துணைக்கு நாங்க நிற்கிறோம் என்றுதான் மேல் இடத்தில் பதவியில் இருப்பவர்கள் சொல்ல வேண்டும். ஆனால் அதை தட்டி கழிப்பது போன்று பேசக்கூடாது என்று ராதிகா சரத்குமார் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications