அறுவை சிகிச்சை.. இரண்டு மாதங்களாக வலி! அனைத்தையும் தூக்கி போட்ட சரத்குமார்.. நெகிழ்ந்த ராதிகா
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் மகளிர் தினத்தை முன்னிட்டு தான் இரண்டு மாதங்களாக பட்ட கஷ்டங்கள் குறித்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய கணவர் சரத்குமார் தனக்காக செய்த செயல்கள் குறித்தும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை ராதிகா சரத்குமார் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானாலும் இப்போது வரைக்கும் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது பல நடிகர்களுக்கு அம்மாவாகவும், அக்காவாகவும் போல்ட் ஆன கேரக்டரில் நடித்துவரும் ராதிகா சின்னத்திரையிலும் பெரும் புரட்சி செய்திருந்தார்.

சின்னத்திரையில் அறிமுகம்
ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் ஒரு சில நடிகைகள் கதாநாயகியாக நடித்து, அதற்கு பிறகு அங்கு வாய்ப்பு இல்லாத பிறகுதான் சின்னத்திரையில் நடிக்க தொடங்குவார்கள். ஆனால் ராதிகா சரத்குமார் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல அதிகமான சீரியல்களை தயாரித்தும் இருக்கிறார்.
அரசியல் பிரமுகர்
அது மட்டுமல்லாமல் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் ஆகவும் இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று மகளிர் தினத்தை உலகமெங்கும் உள்ள எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாளில் ராதிகா சரத்குமார் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.
ராதிகா போட்ட போஸ்ட்
அதில், என்னை பற்றியோ என் வேலையை பற்றியோ பேசுறவங்களே இல்ல. கடந்த ரெண்டு மாசமா ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ரெண்டு படம் நடிச்சிட்டு இருந்தேன் அப்போது என்னுடைய முழங்காலில் வலி ஏற்பட்டது, வலிக்கு அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். நான் அதற்காக அறுவை சிகிச்சையும் செய்திருந்தேன்.
கால் வலியில் தவிப்பு
வலி நிவாரணி மாத்திரைகள், முழங்கால் பிரேஸ் கிரையோதெரபி எல்லாம் போட்டு வலி சரி பண்ணிட்டு இப்போ என் ஆதரவாக இருந்த குடும்பத்திற்கு நன்றி சொல்லிட்டு வலியில் படுத்துக்கிட்டு இருந்தப்ப என் சிந்தனையை மாற்ற வேண்டியதாய் இருந்தது. அந்த நேரத்தில் என் பிரண்டு சொன்னாரு இந்த தயாரிப்பாளர்கள் நீங்க இதை செஞ்சு படத்தை முடித்ததற்கு நன்றியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று சொன்னார்.
மகளிர் தின வாழ்த்து
ஆனால் நான் எதையும் எதிர்பார்க்கல. நான் என் வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வேலையிலும், தன்னை அதிகாரம் பண்ணுற வேலையையும், தன்னை அதிகமாக நேசிக்கிற வேலையையும், தன் வாழ்க்கையைப் பற்றி நன்றி சொல்லணும்னு நான் ஆசைப்படுகிறேன்.
தங்க இதயம் சரத்குமார்
என் மிகப்பெரிய தூண் தங்க இதயம் கொண்ட என் சரத்குமார் தான். அவர் என்னை ஒரு குழந்தை போல கவனித்துக் கொண்டார். இந்த இரண்டு மாதங்களாக அவருடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னை நன்றாக கவனித்து பார்த்துக்கொண்டார் என்று மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை ராதிகா பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ராதிகா சீக்கிரமாக குணமாகி வரவேண்டும் என்று வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications