நாலாவது கல்யாணம் செய்த நடிகர்.. ஒன்றிணைந்த ஜெமினியின் மகள்கள்.. அப்ப நடிகை ராஜஸ்ரீ? பிரபலம் பேட்டி
சென்னை: பூவா, தலையா என்ற படத்தில் இணைந்து நடித்தபோது, நடிகை ராஜஸ்ரீயுடன் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பல கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றார் ஜெமினி கணேசன். நடிகை ராஜஸ்ரீயை 3வது திருமணம் செய்யவும் முயன்றார்.. அதற்குள் சாவித்ரி வெகுண்டெழுந்து, தகராறு செய்தார்.. இதனால் ராஜஸ்ரீயை ஜெமினியால் திருமணம் செய்ய முடியாமல் போய்விட்டது என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு ஜெமினிகணேசனின் மூத்த மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், சினிமா துறையில் இருந்த அத்தனை பெண்களுக்கும் என் அப்பா மேல ஒரு கண்ணு இருக்கும். அவரை பாக்காத, மயங்காத பெண்களே இல்ல.

சாவித்ரி, இரவு கொட்டும் மழையில் எங்க வீட்டுக்கு ஓடி வந்த பெண்.அவர் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவருக்கு தாலி கட்டி மனைவியாக வாழ்க்கை கொடுத்தார். சாவித்ரிக்கு கையெழுத்து போட தெரியாது, தமிழ் பேச தெரியாது அதையெல்லாம் அவருக்கு கற்றுத்தந்தது என் அப்பா தான்.
கார் டிரைவிங், குதிரை சவாரி
அவருக்கு கார் ஓட்டவும், குதிரை சவாரி செய்யவும் சொல்லி கொடுத்தது அப்பா தான். சாவித்ரி ரொம்ப பொசசிங், 15 வருஷம் எங்க அப்பாவ மிரட்டி, அவரை நைட்டு எங்க வீட்டுக்கு வர விடாம அவர் வீட்லயே வச்சிருந்தாங்க..
எங்க அப்பா மேல் என் அம்மா அலமேலுவுக்கு கொள்ள காதல்.. அதனால் தான் அவரை விவாகரத்து செய்யாமலேயே இருந்தார். உசுரே போனாலும் அவரை விட்டு போக மாட்டாங்க. அந்த மாதிரி ஒரு குடும்பத்தை கலைச்சது சாவித்ரி. அவங்க பொண்ணு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தான் சாவித்ரி அண்ணாநகர் போனார். முறையாக வருமானவரி தாக்கல் செய்யாமல், கண்டவங்களோடு உறவு வைத்துக் கொண்டதால் எல்லாவற்றையும் இழந்துவிட்டார் சாவித்ரி" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
தெலுங்கு நடிகை
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "திருமணமாகி குழந்தையுடன்தான் சினிமாவுக்குள் நுழைந்தார் ஜெமினி கணேசன்.. புஷ்பவள்ளி என்ற தெலுங்கு நடிகையை காதலித்தார்.. திருமணம் செய்யவில்லை. ஆனால், புஷ்பவள்ளி-ஜெமினிக்கு 2 பெண் குழந்தைகளும் பிறந்தன.. அவர்தான் இந்தி நடிகை ரேகா,..
தன்னுடைய அம்மாவை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார் என்பதற்காக, ஜெமினி கணேசனிடம் பல காலம் பேசாமல் இருந்தார் நடிகை ரேகா..
சாவித்திரிக்கு 2 குழந்தைகள்
பிறகு சாவித்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. சாவித்ரிக்கும் 2 குழந்தைகள் பிறந்தனர்.. இதற்கு பிறகு பூவா, தலையா என்ற படத்தில் நடித்தபோது, ராஜஸ்ரீயுடன் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பல கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றார் ஜெமினி கணேசன். 3வதாக நடிகை ராஜஸ்ரீயை திருமணம் செய்ய முயன்றார்.. அதற்குள் சாவித்ரி வெகுண்டெழுந்து, தகராறு செய்தார்.. இதனால் ராஜஸ்ரீயை ஜெமினியால் திருமணம் செய்ய முடியாமல் போய்விட்டது.
80 வயது பிறந்தநாள்
பிறகு ஜெமினிக்கு 78, 80 வயது நெருங்கும்போது, 25 வயது வேறு நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தார்.. செலவு அதிகமாக செய்து, அவரை ஸ்டுடியோக்களுக்கு அழைத்து சென்று, மேக்கப் டெஸ்ட் எடுத்தார்.. சொந்தமாக படம் எடுக்க போவதாகவும், அப்பெண்ணை ஹீரோயினாக்க போவதாகவும் ஜெமினி கணேசன் கூறினார். பிறகு அப்பெண்ணை திருமணமும் செய்து கொண்டார்.
ஏற்கனவே சொத்து விவகாரம் ஜெமினியின் வீட்டில் நடந்து கொண்டிருந்ததால், இந்த 4வது திருமணத்தினால் குடும்பத்தில் மிகப்பெரிய தகராறு வெடித்து.. இறுதியில் மகள்கள் எல்லாரும் சேர்ந்து, அந்த பெண்ணுக்கு ஒரு செட்டில்மென்ட் செய்து அனுப்பிவிட்டார்கள்.. இதற்குபிறகு, 80வது பிறந்தநாளை, குடும்பத்தினர் அவருக்காக சிறப்பாக கொண்டாடினார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications