பாகுபலிக்கு பிறகு தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு எந்த கதையும் இல்லை! புதுபிசினஸ் தொடங்கிய ரம்பா பளிச்
சென்னை: நடிகை ரம்பா தன்னுடைய இரண்டாவது ஹோம் அப்ளையன்ஸ் ஷோரூம் திறப்பு விழாவில் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகிகளை மையப்படுத்தும் கதை இல்லாததால் தான் நடிகைகள் பிறமொழி படங்களில் நடிக்கிறார்கள், தமிழில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு எந்த கதையும் எதிர்பார்த்த அளவுக்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இல்லை என்று பேசி இருக்கிறார்.
நடிகை ரம்பா தமிழில் காதலா காதலா, விஐபி, அருணாச்சலம், த்ரீ ரோசஸ், குங்குமபொட்டு கவுண்டர், பூமகள் ஊர்வலம், உள்ளத்தை அள்ளித்தா என்று பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜானகிராமன், ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன் என பல வெற்றி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் தான் ரம்பா விஜயவாடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரம்பாவிற்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அதுவும் குறிப்பாக மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன் போன்ற பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது குடும்பத்தோடு ரம்பா வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். தற்போது ரம்பாவுக்கு 47 வயது ஆகிறது. இப்போது ரம்பா திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பிசினஸில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு கோயம்புத்தூரில் ஒரு ஹோம் அப்ளையன்ஸ் இருக்கிறதாம். இந்த நிலையில் இப்போது இரண்டாவது பிரான்சை தொடங்கி இருக்கிறார். அதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்று இருக்கிறது. அப்போது ரம்பா தமிழ் சினிமா பற்றி பல விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் ரம்பா பேசுகையில் தமிழ் சினிமாவில் இப்போது நல்ல கதைகள் இல்லாததால் தான் தமிழ் நடிகைகள் பிற மொழிகளில் நடிக்கின்றனர். முன்பு இருந்தது போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இப்போது கதை இல்லை. ஹீரோ பற்றி கதை இருக்கிறது. அதுபோல பாகுபலிக்கு படத்திற்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எந்த கதையும் இல்லை என்று பேசிக்கொண்டிருந்த ரம்பாவிடம் செய்தியாளர்கள் நீங்கள் ஹோம் அப்ளையன்ஸ் தொடர்ந்து தொடங்கி கொண்டிருக்கிறீர்கள், வீட்டில் சமையல் செய்வீர்களா என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு கலகலப்பாக ரம்பா பதிலளித்திருக்கிறார். அதாவது எனக்கு சமையல் நன்றாகவே தெரியும். என்னுடைய கணவர் இலங்கையை சேர்ந்தவர் அங்குள்ள சமையல்கள் எனக்கு எல்லாமே தெரியும். வேணும் என்றால் போட்டி வைத்து பாருங்கள் நான் எல்லா சமையலையும் செய்து அசத்தி விடுவேன். நான் சமையல் நல்லபடியாக செய்வதால் தான் என்னுடைய கணவர் இப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தன்னுடைய கணவரை தட்டிக் கொடுத்த படியே சிரித்த முகமாக ரம்பா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதோடு எனக்கு பிடித்த கோயம்புத்தூரில் என்னுடைய இரண்டாவது கிச்சன் செட் பிரான்ச் ஓபன் ஆவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய ஹோம் அப்ளையன்ஸ் நடுத்தர வர்க்கத்து மக்களின் வீட்டில் பயன்படுத்தும் பொருள்களில் இருந்து பணக்காரர்கள் வீட்டில் பயன்படுத்தும் எல்லா பொருள்களும் இருக்கிறது. மக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் தான் எங்களால் இரண்டாவது பிரான்ச் தொடங்க முடிந்தது என்று அந்த பேட்டியில் ரம்பா பேசியிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications