சோ எங்க மாமா தான்.. எங்க அம்மாவிடம் என்னால 8 வருஷமா பேசல! அவரை பார்த்தாலே.. ரம்யா கிருஷ்ணன் உருக்கம்
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் சினிமாவில் நடிக்க வந்தது தன்னுடைய மாமாவான நடிகர் சோவிற்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அதனால் என்னுடைய அம்மாவிடம் அவர் சண்டை போட்டு இருந்தார் என்று தன்னுடைய குடும்ப ரகசியத்தை பற்றி முதல்முறையாக பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது படையப்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்து எல்லோரையும் மிரட்டி விட்டார். வில்லிகளில்
அதிகமானவர்களை வெறுப்படைய வைத்தது மற்றும் மிரட்டலான வில்லி என்று லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக நீலாம்பரியின் பெயரும் இருக்கும்.

அந்த அளவிற்கு ஒரே படத்தால் புகழில் உச்சிக்குப் போன ரம்யா கிருஷ்ணன் இப்ப வரைக்கும் ராஜமாதாவாக தன்னுடைய நடிப்பில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்ல நான் சின்ன திரையிலும் கில்லி தான் என்று சொல்லி அடிக்கும் விதத்தில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கலசம் சீரியல் மூலமாக சீரியலில் நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு தங்கம், ராஜகுமாரி, வம்சம் என்று அடுத்தடுத்து சீரியல்களில் பிஸியாக நடித்திருக்கிறார்.
அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு கண்டிப்பு கலந்த அனுசரணையான பேச்சால் பலரையும் கவர்ந்திருந்தார். அதுபோல பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும்போது அதில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதாவிற்கும் இடையே பெரிய கருத்து மோதல் பிரச்சனையும் வெடித்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா துறையில் 30 வருடங்களுக்கு மேலாக ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் அவருடைய சொந்த வீட்டில் ஒருவர் அவரை நடிக்க கூடாது என்று பிரச்சினை செய்திருக்கிறார். அதுவும் வேறு ஏதுமில்லை நடிகராகவும் அரசியல் பிரபலமான சோ தான். இவர் ரம்யா கிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் அதாவது ரம்யா கிருஷ்ணனின் பாட்டியும் சோ அவர்களின் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகளாம்.
இதனால் சோ ரம்யா கிருஷ்ணனின் அம்மாவிடம் ரம்யா கிருஷ்ணனை நடிக்க விட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ரம்யா கிருஷ்ணன் விடாப்பிடியாக நடிக்க வந்து விட்டதால் சோ ரம்யா கிருஷ்ணனின் அம்மாவிடம் எட்டு வருடங்களாக பேசவில்லையாம். ஆனாலும் அவர் வீட்டில் தான் நானும் வளர்ந்தேன். அவர் எங்கள் வீட்டிலும் அதிகமாக இருப்பார். அவரிடம் நான் பேச வேண்டும் என்றாலே எனக்கு பயமாக இருக்கும். எதுவும் சொல்லி விடுவாரோ என்று பயந்து பயந்து தான் பேசுவேன் என்று அந்த பேட்டியில் நடிகர் சோ குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications