நீலாம்பரி ஸ்டைலில் அமைச்சர் ராஜ்மோகனை கவனித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.. ரசிகர்கள் சொல்வது இதுதான்
சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்மோகன் வந்த போது அவருக்கு மற்றவர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் அமர்ந்தபடி வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் கால் மேல் கால் போட்டு கூலாக அமர்ந்திருக்கும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே சோசியல் மீடியாவில் ராஜ்மோகனை கலாய்க்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சரே இருந்தாலும் நான் இப்படித்தான் என்று நீலாம்பரி ஸ்டைலில் கவனித்த ரம்யா கிருஷ்ணன் என்று கேப்ஷன் கொடுத்து இதை வைரல் செய்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணனை பொறுத்தவரை அவரை எங்கு பார்த்தாலும் முதலில் நினைவுக்கு வருவது படையப்பா படத்தின் நீலாம்பரி கேரக்டர் தான்.
மறக்க முடியாத நீலாம்பரி
அந்த அளவுக்கு அந்த கேரக்டர் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது. அதற்கு முன்பு ரம்யா கிருஷ்ணன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரியாக படையப்பா படத்தில் அவர் வில்லியாக நடித்த விதமே ரசிகர்களை கவர்ந்து விட்டது. அந்த படத்தை பார்க்கும்போது அவரை திட்டினாலும் படத்தின் கடைசியில் அவருடைய விடாப்பிடியான காதல், கம்பீரம் எல்லாமே ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.

வில்லத்தனத்திலும் தனித்துவம்
இப்போதுதான் ஹீரோக்கள் கூட வில்லத்தனம் பண்ணுகிறார்கள் ஆனால் அப்போவே வில்லத்தனத்தில் மாஸ் காட்டிய ரம்யா கிருஷ்ணன் இப்போதும் ரசிகர்கள் நீலாம்பரி என்று கொண்டாடுவதை தற்போதைய புகைப்படத்தை பார்க்கும் போது தெரிகிறது. ஆனால் இந்த ஒரு புகைப்படத்தை வைத்து ரம்யா கிருஷ்ணன் அமைச்சரை அவமதித்தார் என்று முடிவு செய்வது சரியாக இருக்காது. அவர் அமர்ந்தபடியே கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு மீண்டும் தன் பக்கத்தில் இருந்த நடிகையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
திரிஷா பற்றி தெரியுமா? நல்லா, அழுது ஏமாற்றுவாங்க.. ரம்யா கிருஷ்ணன் சீண்டும் வீடியோ வைரல்!
ஆனால் அவர் கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்து நடிகைகளிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு நீலாம்பரி கேரக்டர் நினைவுப்படுத்திவிட்டது தான் இந்த வைரலின் சுவாரஸ்யம். பொதுவாக எவ்வளவு பெரிய ஆள் வந்தாலும் நம்ம கெத்துக் குறையக்கூடாது என்ற பாணியில் இருக்கும் நீலாம்பரியின் அந்த பழைய ஸ்டைலை ரசிகர்கள் இப்போ கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது.

அமைச்சருக்கு மரியாதை
இதை பார்க்கும் ஒரு சிலர் என்னதான் இருந்தாலும் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வருகிறார் அப்போது மரியாதைக்காகவாவது எழுந்து நின்று இருக்கக் கூடாதா என்று கமெண்ட்ஸ்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு ரசிகர்களே பதிலடி கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர் என்றால் அவரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். நமக்காக தான் அவர் வேலை பார்க்கிறாரே தவிர அவருக்கு எழுந்து நின்று வணக்கம் சொல்ல வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று சிலர் போர்க்கொடி தூக்கிவிட்டார்கள்.
ரசிகர்களின் கேள்வி
எது எப்படியோ இப்போ நீலாம்பரிக்காகவும், அமைச்சர் ராஜ்மோகனுக்காகவும் கமெண்ட்ஸ்களில் விவாதம் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட ரம்யா கிருஷ்ணருக்கு தெரியுமா என்பதுதான் அவருடைய ரசிகர்களின் கேள்வி. சாதாரணமாக ஒரு நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை இவ்வளவு பெரிது படுத்த வேண்டுமா? நாட்டுல எவ்வளவோ வேலை இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு இப்போ இத வைத்து விவாதத்தை ஏற்படுத்துறீங்களே என்பதுதான் பலருடைய கேள்வி.


Click it and Unblock the Notifications
