ரம்யா பாண்டியன் கல்யாணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. அந்த நடிகர் குடும்பமும் இருக்கு..!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய காதலர் தவோன் என்பவரை திருமணம் செய்திருக்கும் நிலையில் அவருடைய திருமணத்தில் நடிகர் அருண்பாண்டியனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சில நாட்களாகவே அடுத்தடுத்து பல நடிகர், நடிகைகள் தங்களுடைய திருமண செய்திகளை அறிவித்து வருகிறார்கள். நேற்றைய தினம் நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் பிரம்மாண்டமாக ஜப்பானில் நடைபெற்றது. அதுபோல எந்த அறிவிப்பும் வெளியிடாமல் நடிகர் பிரதீப் அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த பிரதீப் தன்னுடைய காதலியை திருமணம் செய்திருந்தார்.

பிரதீப் உடைய திருமணம் இந்துமுறையிலும், கிறிஸ்தவ முறையில் நடைபெற்றது. இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது. அது போல அதற்கு முந்தைய நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த விக்ரமனும் தன்னுடைய திடீர் திருமணத்தை சேர்ந்திருந்தார். விக்ரமன் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதோடு விசிக கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார் .
ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் திருமணம் செய்யப்போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு தான் அவர் காதலில் விழுந்திருக்கிறார் . உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். அந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு இந்த அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

அந்த வரிசையில் இன்று ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரம்யா பாண்டியன் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார்.

கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்.. வெளியான க்யூட்டான புகைப்படம்.. குவியும் வாழ்த்து
தொடர்ச்சியாக பிக்பாஸ் பிரபலங்கள் திருமணம் செய்து வருகிறார்கள் அந்த வரிசையில் ரம்யா பாண்டியனும் இடம் பிடித்திருக்கிறார். ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டர் தவோன் என்பவரை தான் காதலிக்கிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பே பரவி வந்தது. அதை சில வாரங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு ரம்யா பாண்டியன் உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியனின் திருமணம் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இதில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ரம்யா பாண்டியன் நெருங்கிய உறவினர் அருண்பாண்டியன் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் கணவர் அசோக் செல்வன் போன்றோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

நடிகர் அசோக் செல்வனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கீர்த்தி பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் குறித்து பெருமையாக பகிர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அசோக் செல்வனின் பிறந்த நாளில் அவருடைய குடும்பத்தில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.













Click it and Unblock the Notifications