சிவக்குமாருடன் நடித்த ராணி சந்திராவை ஞாபகம் இருக்கா? பத்ரகாளியில் நடித்தாரே? 1976ல் எலும்பு கூட தேறல
சென்னை: அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியிலிருந்து, நாம் இன்னும் மீளவேயில்லை.. வெறும் 5 நிமிடத்தில் எல்லாமே நடந்துமுடிந்துவிட்டது.. உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள்கூட ஏர்போட்டை விட்டு கிளம்பியிருக்க மாட்டார்கள். அதற்குள் இப்படியாகிவிட்டது.. எத்தனையோ விமான விபத்துகளை இந்தியா சந்தித்துள்ளது. அதில் 1976-ல் நடந்த விபத்தை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.. மும்பையில் என்ன நடந்தது?
எழுத்தாளர் மகரிஷி ராணி முத்து மாத இதழில் நாவலாக எழுதிய கதையை இயக்குநர் திருலோக சந்தர் படமாக "பத்ரகாளி" என்ற பெயரில் எடுத்தார்.
ஆரூர் தாஸின் வசனத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டானது..

பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல்
கேட்டேளா இங்கே அதைப்பார்த்தேளா அங்கே என்ற பாடலும், கண்ணன் ஒரு கைக்குழந்தை , கண்கள் சொல்லும் பூங்கவிதை என்ற பாடலும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.. இன்றுவரை அந்த பாடல் டிவியில் ஒலித்து கொண்டுதானிருக்கிறது.
இதில் சிவக்குமார் ஹீரோவாகவும், ராணி சந்திரா என்ற மலையாள நடிகை ஹீரோயினாகவும் நடித்தனர்.. இந்த படம் கிட்டத்தட்ட முடியும் தறுவாயை நெருங்கியபோது, துபாய் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துபாய் சென்றார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முடித்து திரும்பியவர் விமான விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 21 தான்.. ராணி சந்திராவுடன் அவரது அம்மா, 3 தங்கைகள் மற்றும் 90 பயணிகளும் இதே விமான விபத்தில் மாண்டனர்.
இதனால் பத்ரகாளி படம் அப்படியே நின்றது.. எனினும், ராணி சந்திரா முகச்சாயலில் இருந்த புஷ்பா என்ற க்ரூப் டான்சரை வைத்து மீதிப்படத்தை எடுத்து முடித்தார் இயக்குனர்.. டூப் நடிகையை வைத்து முடித்ததில் இயக்குநருக்கு பெரிதாக திருப்தி இல்லையெனினும், கேமராமேனின் மாறுபட்ட கேமரா ஆங்கிள், , லாங்க் ஷாட் போன்றவைகளை எடுத்து, அந்த படத்தை ஒருவழியாக வெளியிட்டனர்.
மீறப்பட்ட ஒப்பந்தம்
1976 அக்டோபர் 11-ந்தேதி பம்பாயில் இந்த விமான விபத்து நடந்தது.. விமானத்தில் பயணித்த ஒட்டுமொத்த பேரும் இறந்துவிட்டார்கள்
பொதுவாக, படம் முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது, வெளிநாடுகளுக்கெல்லாம் போகக்கூடாது என்றெல்லாம் ஒப்பந்தம் போடுவது வழக்கம்.. ராணி சந்திராவுக்கும் அப்படித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதையும் மீறி தன்னுடைய குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.
தரை தொடும் முன்பே
சுமார் ஆயிரம் அடி உயத்தில் பறந்தபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக திரும்பி மண்ணில் பாய்ந்து விழுந்தது. இதனால் பயணிகள் மீது பெட்ரோல் பீறிட்டு அடித்ததில், விமானம் தரையை நெருங்கும் முன்பேயே தீ பிடித்து விட்டதாம்.. உடல்கள் சிதறி விழுந்து, கருகின.
உடல் பாகங்களை வைத்து, யாருடைய உடல் என்று அடையாளம்கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்த விபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் பொன்னப்ப நாடாரும் பயணித்திருந்தார்.. அவரது சடலமே அப்போது யாருக்கும் கிடைக்கவில்லை. எப்போதுமே
கடைசி ஆசையும் கருகியது
இப்படி யாருடைய அடையாளமும் தெரியாதபட்சத்தில், கருகிய சடலங்களை வைத்துதான் இறுதிச்சடங்கு நடத்தப்படும்.. அப்படித்தான் இந்த விபத்திலும் சடலம் கிடைக்காதவர்களின் குடும்பத்தினரும் இறுதிச்சடங்கை நடத்தினார்கள். 70களில் பரபரப்பாக பேசப்பட்ட விபத்து இதுவாகும்.
விபத்துக்கு பிறகு, பத்ரகாளி படம் பட்டிதொட்டியெங்கும் படம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது... தமிழில் நிறைய படங்கள் நடிக்கணும், சென்னையில் வீடு வாங்கி, அம்மா, தங்கைகளை வாழ வைக்கணும் என்று எந்நேரமும் சொல்லி கொண்டிருந்த ராணிச்சந்திராவின் ஆசையும், அவருடனேயே சேர்ந்து கருகிப்போய்விட்டது..!!
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications