Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஸ்டாவில் வந்த தொல்லை… ஆதாரத்தோடு முதலமைச்சரை டேக் செய்து, மாமன்னன் பட நடிகை ரவீனா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Actress Raveena Ravi) சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகை ரவீனா ரவி, சமூக வலைத்தளங்களில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக நேர்ந்து வரும் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து அருவருப்பான வார்த்தைகளில் மெசேஜ்கள் அனுப்புவது, தவறான கருத்துகளை பதிவு செய்வது மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் குறிவைத்து தாக்கி வருவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Raveena Ravi Tamil Actress Cyber Crime Tamil Nadu

நடிகை ரவீனா ரவி பதிவு

ரவீனா ரவி பகிர்ந்த பதிவில், "இந்த விஷயத்தை பொதுவெளியில் பேச வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினரையும், என் நண்பர்களையும், என்னையும் மூன்று வருடங்களாக துன்புறுத்தி வரும் ஒருவரிடமிருந்து பாதுகாக்கவே இந்தப் பதிவை இடுகிறேன். காவல்துறையில் புகார் அளித்து, எச்சரிக்கைகள் கொடுத்தும் இந்த தொல்லைகள் நிற்கவில்லை" என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரவீனா ரவி தன்னிடம் மோசமாக பேசிய நபர்களின் புகைப்படங்கள் மற்றும் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்து எதற்கு நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு க ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார். ரவீனா மாமன்னன் படத்திற்கு பிறகு என் பெரிய அளவில் பிரபலமான இப்போது சோஷியல் மீடியாவில் தன்னுடைய தைரியத்தாலும் பிரபலமாக பேசப்படுகிறார்.

பல கணக்குகள், ஒரே நபர்

ரவீனா ரவி கூறியதுபோல், அந்த நபர் பல சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி, வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறார். "ஏற்கனவே சந்தித்தோம்", "நிலையான உறவில் இருக்கிறோம்", "திருமணம் நிச்சயம்" போன்ற போலியான கதைகளை உருவாக்கி, நடிகைகள் உள்ளிட்ட பல பெண்களை பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஒருவரை மட்டும் குறிவைக்கும் பிரச்சினை அல்ல; சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிவைக்கும் ஒரு ஆபத்தான மனநிலையின் வெளிப்பாடு என்றே பலரும் பார்க்கிறார்கள். இதில் மிகவும் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால், ரவீனா ரவியால் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த மனஅழுத்தத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான்.

"என் காரணமாக என் குடும்பத்தினரும், நண்பர்களும் இதைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்ற அவரது வார்த்தைகள் பல பெண்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

சட்ட நடவடிக்கை எடுத்தும் தொடரும் தொல்லை

இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சட்டபூர்வமாக அணுகியதாகவும், காவல்துறையில் புகார்கள் கொடுத்ததாகவும் ரவீனா ரவி தெரிவித்துள்ளார். ஆனாலும், சட்ட நடவடிக்கைகள் இருந்தபோதிலும் அந்த நபர்களின் தொல்லை நிற்கவில்லை என்பதே இப்போது சமூகத்தில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நடவடிக்கைகள் தாமதமாகுவதும், குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழச் செய்கிறது.

"சென்னை பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று சொல்லப்படுகிறதே, அந்த பாதுகாப்பு உண்மையிலேயே எல்லோருக்கும் கிடைக்கிறதா?" என்ற கேள்வியை ரவீனா ரவியின் பதிவு மறைமுகமாக எழுப்புகிறது. இதுபோன்ற சம்பவங்களில் அதிகாரிகள் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பெண்களுக்கு நேரும் மறைமுக வன்முறை

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு நேரும் தொல்லைகள், உடல் ரீதியான வன்முறையைப் போலவே மன ரீதியான வன்முறையாக மாறியுள்ளது. முகம் தெரியாமல் மறைந்து கொண்டு அருவருப்பான வார்த்தைகளால் தாக்குவது, பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்குவது, தொடர்ச்சியாக மெசேஜ்கள் அனுப்பி பயமுறுத்துவது போன்றவை பல பெண்களின் மனநலத்தையே பாதிக்கின்றன.

பிரபலமான நடிகைகள் கூட இதுபோன்ற தொல்லைகளை எதிர்கொள்ளும் போது, சாதாரண பெண்கள் எவ்வளவு மன அழுத்தத்தை சந்திப்பார்கள் என்பதையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. பல பெண்கள் சமூகத்தில் பேசினால் "நீயே ஏதாவது செய்திருப்பாய்" என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால், தங்களுக்கு நேரும் அவமானங்களை மௌனமாகவே தாங்கிக் கொள்கிறார்கள்.

Raveena Ravi Tamil Actress Cyber Crime Tamil Nadu

பெண்களுக்கு ஒரு ஆதரவு செய்தி

ரவீனா ரவி வெளியிட்ட இந்த பதிவு, சமூகத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்லுகிறது - இப்படிப்பட்ட தொல்லைகளை தனியாகச் சமாளிக்க முயற்சிக்க வேண்டாம். உங்களுக்கு நேரும் எந்தவொரு துன்புறுத்தலையும் லேசாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக நம்பகமானவர்களிடம் பேசுங்கள். சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிப்பது, அந்த நபர்களை பிளாக் செய்வது, ஆதாரங்களை சேகரித்து வைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.

யாருடைய தவறான வார்த்தைகளும், உங்கள் வாழ்க்கையின் மதிப்பை குறைக்க முடியாது. சிலர் செய்யும் அருவருப்பான செயல்களுக்கு நீங்கள் காரணம் அல்ல. மன அழுத்தம் அதிகமாகும்போது உளவியல் ஆலோசனை பெறுவதும் தவறில்லை. இதுபோன்ற தொல்லைகள் காரணமாக மனம் உடைந்து தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு யாரும் தள்ளப்படக் கூடாது.

அரசு பொறுப்பு

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு மட்டுமல்லாமல் சமூக வலைத்தள நிறுவனங்களும் தங்களுடைய பாதுகாப்பு அமைப்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். போலி கணக்குகள் உருவாக்கி பெண்களை தொந்தரவு செய்வதை தடுக்கும் தொழில்நுட்ப வசதிகள், புகார் அளித்தவுடன் விரைவான நடவடிக்கை எடுக்கும் முறைகள் ஆகியவை கட்டாயமாக வேண்டும்.

ரவீனா ரவி வெளியிட்ட இந்த பகீர் தகவல், சமூக வலைத்தளங்களில் மறைந்திருக்கும் ஒரு பெரிய பிரச்சனையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இது ஒரு நடிகையின் பிரச்சனை மட்டுமல்ல; சமூகத்தில் உள்ள பல பெண்கள் தினசரி எதிர்கொள்ளும் வலி. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கும் நடக்காத வகையில், சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+