Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்ரா மாதிரி போயிடணும்.. காரின் பின்சீட்டில் அதை பார்த்து பயந்துட்டேன்.. ரூ.18 லட்சம் தந்தும்: ரிஹானா

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ராஜ் கண்ணனால் என்னுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தேன்.. அப்போது என்னை காரில் பின்தொடர்ந்து கொண்டே வந்தார்.. வீட்டுக்கு வந்து அசிங்கப்படுத்திவிடுவாரோ என்ற பயத்தில், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரவு முழுக்க காரில் சுற்றிக்கொண்டே இருந்தேன். கார்தான் எனக்கு அப்போது அடைக்கலமாக இருந்தது என்று நடிகை ரிஹானா பேகம் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம். இவர், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, 18 லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Television chitra reehana rihana begum

இதைத்தொடர்ந்து ரிஹானா பேகமும், "தொழில் தொடங்குவதற்காக ராஜ் கண்ணனுக்கு என்னுடைய 20 லட்சம் ரூபாயை தந்தேன். ஆனால், அந்த பணத்தை திருப்பி தரவில்லை.. எனக்கு தெரியாமலேயே என்னை திருமணம் செய்து கொண்டார் என்று பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறியிருந்த ரிஹானா பேகம்,

இந்நிலையில், அதைத்தொடர்ந்து நடிகை ரிஹானா பேகம், Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒரிஜினல் பெயர் அழகர் சாமி

அதில், "ராஜ் கண்ணனின் ஒரிஜனல் பெயர் அழகர் சாமி..ஒருநாள் என்னிடம், "இந்த அழகர் சாமியின் ஹிஸ்டரி சொல்றேன், கேட்டுக்கோ, என்னை பற்றி தெரிந்து கொள், பின்னாளில் இதனால் என்மீது உனக்கு வருத்தம் வந்துவிடக்கூடாது" என்று சொல்லி காரில் உட்கார வைத்து, என்னை திருவான்மியூருக்கு அழைத்து சென்றார்.. அங்கு அவர்களது சொந்த வீடு உள்ளது. அந்த வீடு ஒருமுறை கடனில் மூழ்கியபோது, தான் தான் மீட்டு தந்ததாக சொன்னார்.

தாய், தகப்பனை இழந்து

14 வயதிலேயே தாய் தந்தையை இழந்த நிலையில், வடபழனி பஸ் டிப்போவில் படுத்து கொண்டதாகவும், பிறகு ரவுடி கும்பல் ஒன்று, தத்தெடுத்து கொண்டதாகவும், அந்த கும்பலுடன் சேர்ந்து கொள்ளை திருட்டு, வழிப்பறி, அடிதடி போன்றவற்றில் இறங்கி, நிறைய கேஸ்கள் தன் மீது உள்ளதாகவும் என்னிடம் சொன்னார்.. ஆனால், அழகர் சாமி என்ற ஒரிஜினல் பெயரில் இத்தனை கேஸ்களும் உள்ளன..

பெசன்ட் நகர் பீச்சில், ஹோம் ஒன்றில் நிறுத்திவிட்டு, நான் ஒரு சம்பவம் செய்தேன், இங்கே என்னை ஹோமில் போட்டார்கள் என்றார்.. இப்படி காரில் அழைத்து சென்று ஒவ்வொரு சம்பவ இடத்தையும் எனக்கு காட்டினார்.

காரில் டிரைவர் சீட்டுக்கு பக்கத்திலிருந்து ஒரு பெரிய கத்தியை உறையிலிருந்து வெளியே எடுத்தார். இது ஷூட்டிங் கத்தியா? என்று கேட்டதற்கு, தன்னுடைய பாதுகாப்புக்கு என்று சொன்னார். காரின் பின்சீட்டுக்கு அடியில் அரிவாள் வைத்திருக்கிறார்.

நடிக்க துவங்கினேன்

அப்போதுதான் நான் பயந்து போனேன்.. என்னுடைய பணம் ராஜ் கண்ணணிடம் மாட்டிக் கொண்டிருக்கிறதே? எப்படி வாங்குவது? என்று நிலைகுலைந்துபோனேன்.. . அந்த நொடியிலிருந்துதான் ராஜ் கண்ணனிடம் நடிக்க ஆரம்பித்தேன்..

விபச்சாரம் செய்தாலும், காசு தந்து, உரியவர்களிடம் அனுமதியோடுதான் செய்வார்கள்.. ஒருவரிடம் காசை வாங்குவதற்கு நடித்தால், நான் மோசடிக்காரி.. ஆனால், என்னுடைய காசை வாங்குவதற்கு நடித்தால் எனக்கென்ன பெயர்? நான் ஒவ்வொரு பணமும் உழைத்து சம்பாதித்தது.

அதற்குபிறகு நிறைய அழுத்தங்களை தந்தும் 8 லட்சம் ருபாய் மட்டுமே என்னால் அவரிடமிருந்து வாங்க முடிந்தது.. ஆனால், மிச்ச பணத்தை வாங்க வேண்டுமே என்பதற்காக, தொடர்ந்து ராஜ் கண்ணனிடம் வேறு வழியில்லாமல் நடித்தேன்..

1000 ரூபாய் கிஃப்ட்

ராஜ் கண்ணனுக்கு பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் 12 மணிக்கு 1000 ரூபாயில் ஒரு கிஃப்ட், கேக் தர முடிவு செய்தேன்.. சிரித்த முகத்துடன், அந்த பர்த்டே பார்ட்டியில கலந்து கொண்டேன்.. வாழ்த்து சொல்லி கிப்ட்டையும் தந்தேன்.. பிறகு மெல்ல, மிச்ச பணத்தை எப்போது தரப்போறீங்க? என்று கேட்டேன். என்னை நம்பு, கண்டிப்பாக உன் பணத்தை தந்துவிடுவேன் என்று சொன்னார்.

அசிங்கம் - அவமானம்

ஆனால், அன்று எனக்கும் அவருக்கும் சண்டை வந்து அங்கிருந்து கிளம்பி விட்டேன். ஆனால், அவர் என்னை காரில் பின்தொடர்ந்து கொண்டே வந்தார்.. வீட்டுக்கு வந்து அசிங்கப்படுத்திவிடுவாரோ என்ற பயத்தில், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரவு முழுக்க காரில் சுற்றிக்கொண்டே இருந்தேன். கார்தான் எனக்கு அப்போது அடைக்கலமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் மனசு வெறுத்துப்போய்விட்டது, இதற்கு மேல் இருந்து என்ன செய்வது? ராஜ் கண்ணனுடன் இருந்தால் அவமானப்பட்டு சாகவேண்டும் என அதற்கு மானத்தோடு விஜே சித்ரா போல நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து தற்கொலை முடிவு எடுத்தேன்.

எப்போது நீ சாவ போறே

அப்போது, ராஜ் கண்ணனுக்கு அழுது கொண்டே, "இதற்கு மேல் என்னால், உன்னுடன் போராட முடியாது, என் வாழ்க்கையை நானே முடித்துக் கொள்கிறேன். என்னுடைய குழந்தைகளை பார்த்துக்கோ.. என் பணத்தை வைத்து என்னுடைய குழந்தைகளை நன்றாக பார்த்துக்கோ" என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். அதற்கு ராஜ் கண்ணன், "அப்படியா? நீ எப்பொழுது சாவ? " என்று கேட்டான்.

அப்போதுதான் நினைத்தேன், "இவனுக்காக நாம் ஏன் சாகவேண்டும்" என்ற எண்ணம் வந்தது, என் குழந்தைகளை நினைத்து அந்த முடிவை நான் மாற்றிக் கொண்டேன்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+