பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா மீது திருமண மோசடி புகார்.. ஏமாந்ததாக தொழிலதிபர் வழக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வந்த நடிகை ரிஹானா பேகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இப்போது நடிகை ரிஹானா மீது சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணன் என்பவர் திருமண மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் உட்பட பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரிஹானா சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ரிஹானா சீரியல் பிரபலங்கள் பலருடைய குடும்பப் பிரச்சனைகளில் கூட தலையிட்டு பேசியிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டபோது திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.

சீரியல் நடிகை ரிஹானா பேட்டி
அதுபோல அர்னவ் உடன் தான் பேசிய ஆடியோக்களையும் சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். அதுபோல சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவருக்கு பிரச்சனை ஏற்பட்ட போது கூட சம்யுக்தாவின் கணவருக்கு சப்போர்ட்டாக ரிஹானா பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் பல இடங்களில் ரிஹானா பேசியிருக்கிறார்.
தொழிலதிபர் நடிகை மீது புகார்
இந்த நிலையில் இன்று ரிஹானா மீது சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில் ரிஹானாவிற்கு ஹபிபுல்லா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அவருக்கு முதல் கணவருடன் விவாகரத்து ஆகவில்லை என்பது ரிஹானாவை திருமணம் செய்த பிறகு தான் தெரிய வந்தது. நான் ஏற்கனவே ரிஹானாவிற்கு ஒன்பது லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறேன்.
திருமண மோசடி புகார்
அதற்கு பிறகு சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் ஆன்லைனில் பெற்றுக்கொண்டதாகவும் கூறியிருக்கும் ராஜ் கண்ணன் தான் ரிஹானாவை திருமணம் செய்த பிறகு பூந்தமல்லியில் உள்ள வீட்டில் வசிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்த போது தான் சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்பதால் பலருடன் பழக வேண்டும். இதையெல்லாம் நீங்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் பேசிய ஆடியோ இருக்கிறது என்றும் ராஜ் கண்ணன் அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

நடிகை ரிஹானா மீது புகார்
அதோடு தான் கொஞ்சம் கொஞ்சமாக 18.5 லட்சத்தை ரீஹானாவிடம் ஏமாந்ததாக அந்த புகாரில் ராஜ் கண்ணன் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் ரிஹானா பேகம் அவருடைய தாய் மும்தாஜ் மற்றும் கணவர் ஹபிபுல்லா ஆகிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும் என்று ராஜ் கண்ணன் அந்த புகாரில் தெரிவித்திருக்கும் நிலையில் இது பற்றி விசாரித்த காவல்துறையினர் ரிஹானா மற்றும் தாய் உட்பட 3 பேரையும் இன்று மாலை 3 மணிக்கு விசாரணைக்கு வரும்படி கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி விசாரிப்பதற்காக நாம் ரிஹானாவிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால் அவரிடம் இருந்து சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications