பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகி விட்டாரா? வெளியான புகைப்படம்.. இவருக்கு பதில் இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிகை ரித்திகா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென்று இவர் சீரியலை விட்டு விலகி விட்டார் என்று தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அதே நேரத்தில் சீரியல் அணியினர் எடுத்த புகைப்படத்தில் ரித்திகா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஒரு சில நடிகைகள் பார்த்ததும் பலருக்கும் பிடித்து விடும். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார்கள் என்று பலரும் எண்ணும் அளவிற்கு எளிதில் பரீட்சையமாகிவிடுவார்கள். அந்த மாதிரி தான் சின்னத்திரையில் அதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் ரித்திகா இருந்து வருகிறார்.
அவர் இதற்கு முன்பு ராஜா ராணி சீரியலில் கதாநாயகனின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருந்தார். அருமையான குரல் வளம் கொண்டு பாடும் திறமையுள்ள இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதுவும் ரித்திகா மற்றும் பாலாவின் காம்பினேஷன் பலரையும் கவர்ந்தது.

பாலாவும் ரித்திகாவும் நிகழ்ச்சியில் சுவாரசியத்துக்காக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பலரும் இவர்கள் காதலிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது குறித்து இருவருமே விளக்கம் கொடுத்திருந்தனர். நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம் என்று, அதை நேரத்தில் ரித்திகாவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது.
திருமணத்திற்கு பிறகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா தொடர்ச்சியாக நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியல் அணியினர் அனைவரும் ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு எடுத்த புகைப்படத்தில் ரித்திகாவை காணவில்லை. அதனாலேயே என்னவோ இணையத்தில் வேகமாக ரித்திகா சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற செய்தி பரவி வருகிறது.

அதே நேரத்தில் ரித்திகாவுக்கு பதிலாக நடிகை அன்ஷிதா இந்த சீரியலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அன்ஷிதா காற்றுக்கென்ன வேலி சீரியலில் அபி கேரக்டரில் நடித்து வருபவர் தான். அவரும் இந்த அணி புகைப்படங்களில் இருப்பதால் அவராகத்தான் இருக்கணும் என்று பலரும் கூறிவரும் நிலையில் இது உண்மையான தகவலா? என்று தெரியவில்லை. காரணம் எழில் மற்றும் அமிர்தாவினுடைய காதல் திருமணத்திற்கு பிறகு அழகாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரித்திகா இந்த சீரியலை விட்டு விலகுவாரா? என்றும் கேள்வி எழும்புகிறது.
அதுபோல கதையில் இனி தான் அமிர்தா மற்றும் எழிலுடைய கதை அழுத்தமாக வரப்போகிறது. இந்த நேரத்தில் அவர் விலகுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருமணத்திற்கு பிறகு ரித்திகா இனி சீரியலில் நடிக்க மாட்டாரா? என்றும் கேள்விகள் வரும் நிலையில் ஒருவேளை அக்ஷிதா அமிர்தா கேரக்டரில் தான் நடிக்கப் போகிறாரா? அல்லது செழியனின் கிளைன்ட் கேரக்டரில் நடிக்கப் போகிறாரா? என்றும் கேள்விக்குறியாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications