விஜய் டிவி டாப் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி..! இவருக்கு பதில் இனி “அதே” நடிகை தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் சீரியலில் இருந்து விலக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக இந்த சீரியலில் ஏற்கனவே நடித்த நடிகை தான் மீண்டும் தொடர போகிறாராம். அது யார் என்று விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. காரணம் சீரியல்கள் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் நிலையில் சில நடிகர்களால் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஒரே நேரத்தில் நடிகைகள் ஒரு சில சீரியல்களில் நடிப்பதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சீரியலில் இருந்து சிலர் விலகுகிறார்கள்.

இவருக்கு பதில் இவர்
இன்னும் ஒரு சிலர் குடும்ப பிரச்சனை திருமணம் போன்ற காரணங்களாலும் சீரியலில் இருந்து விலகுகிறார்கள். ஒரு சிலர் மட்டும்தான் சேனல் தரப்பினர் அல்லது சீரியல் தரப்பினரோடு கருத்து மோதல் ஏற்பட்டு பிறகு சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்கள். அதேபோல ஒரு சீரியலில் இருந்து ஒரு நடிகை விலகிவிட்டால் அவருக்கு பதிலாக இன்னொருவர் நடிக்க தொடங்கி விடுவார். ஆனாலும் மற்றொரு நடிகையை அந்த கேரக்டரில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் போகப்போக ஏற்று கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு நடிகை நடித்து அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்த பிறகு அவர் திடீரென்று விலகிவிட்டால், அவருக்கு பதிலாக வேற ஒரு நடிகை அந்த கேரக்டரில் நடிக்க தொடங்கிய பிறகு மீண்டும் பழைய நடிகையை அதே கேரக்டரில் தொடர்வது என்பது அரிதிலும் அரிதாகத்தான் நடக்கிறது. இப்போது அதேபோல ஒரு சம்பவம் தான் விஜய் டிவி சீரியலில் நடிக்க இருக்கிறதாம்.
நடிகை சாய் காயத்ரி
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த சீரியலில் தான் நடிகை சாய் காயத்ரி அணு கேரக்டரில் ஆரம்பத்தில் நடித்திருந்தார். சாய் காயத்ரி ஏற்கனவே ஈரமான ரோஜாவே, ஆண்டாள் அழகர், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
அதேபோல சொந்தமாக பிசினஸும் செய்து வருகிறார். அழகு சாதன பொருட்கள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய், சோப்பு போன்றவற்றையும் தயாரித்து வரும் சாய் காயத்திரி தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஆனால் திடீரென்று நீ நான் காதல் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் சீரியலில் இருந்து விலகுகிறார் என்று கூறப்பட்டது.
தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை
அவருக்கு பதிலாக நடிகை அர்ஷிதா அனு கேரக்டரில் நடித்து வந்தார். அர்ஷிதா ஏற்கனவே பல சீரியல்களில் விஜய் டிவியில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இவர் ராகிணி கேரக்டரில் பல வருடங்களாக நடித்து வந்தார். அந்த சீரியலுக்கு முடிவுக்கு பிறகு தான் இவருக்கு இந்த சீரியலில் வாய்ப்பு வந்தது. அணு மற்றும் ஆகாஷ் ஜோடிக்கு ரசிகர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.
ஆனாலும் இப்போது இந்த சீரியலில் இருந்து நடிகை அர்ஷிதா விலக போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக மீண்டும் அணு கேரக்டரில் சாய் காயத்ரி தான் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலும் ஐஸ்வர்யா கேரக்டரில் ஆரம்பத்தில் நடிகை தீபிகா நடித்து வந்தார் கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் அவர் முகத்தில் பரு அதிகமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.
மீண்டும் அதே நடிகை
தீபிகாவிற்கு பதிலாக சாய் காயத்ரி அந்த சீரியலில் நடித்து வந்தார். ஆனால் சீரியலில் கதையில் மாற்றம் வருவது தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி சாய் காயத்ரியும் அந்த கேரக்டரில் இருந்து விலகி இருந்தார். அப்போது மீண்டும் தீபிகாவே அதே கேரக்டரில் கடைசிவரை நடித்திருந்தார். இப்போது அதேபோல நீ நான் காதல் சீரியலிலும் நடக்கிறதாம்.












Click it and Unblock the Notifications