ஒன்றரை வருஷமா இந்த பிரச்சனை!? வெளியேற்றத்திற்கு காரணம் சொன்ன சாய் காயத்ரி.. இனி கதை இதுதானாம்
சொன்ன கதை பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல்லை என்று தான் வெளியேறியதாக நடிகை சாய் காயத்ரி கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து நடிகை சாய் காயத்ரி வெளியேறி இருக்கிறார்.
நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி சில தகவல்களை கூறியிருக்கிறார்.

சொன்ன கதை இல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து நேற்று ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு பிறகு அவருக்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் தான் எதற்காக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என்பதை பற்றி கூறியிருக்கிறார். அதற்கு முக்கியமான காரணம் என்னிடம் கதை கூறும் போது சொன்ன கதை வேறு ஆனால் அங்கே எடுக்கப்பட்ட கதை வேறாக இருக்கிறது. அதுவும் ஒன்றரை வருடங்களாக நான் இந்த கதை மாற்றத்தை குறித்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன் ஆனால் அங்கே நடப்பது வேராக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இதுதான் கதையாம்
இதுவரைக்கும் விஜய் டிவியில் மட்டுமே சீரியல்களில் நடித்து வந்த நடிகை சாய் காயத்ரி திடீரென இந்த முடிவு எடுக்கும் போது அவருக்கு சீரியல் தரப்பில் இருந்தும் டிவி சேனலில் இருந்தும் ஒரு வாரம் டைம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் அந்த மாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியாக சாய் காயத்ரி கூறியிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் சாய் காயத்ரி இந்த சீரியலில் நடிக்கும் போது இவர் ஒரு 2கே கிட்ஸ் எப்படி மனநிலையில் இருப்பாரோ அதுபோலத்தான் நீங்கள் இருக்கப் போகிறீர்கள். பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நீங்களும் ஒரு மருமகளாக ஆன பிறகு உங்களுக்கென்று தனியாக பியூட்டி பார்லர் நீங்கள் வைத்து புதிய தொழில் தொடங்க இருக்கிறீர்கள். குடும்பமே மொத்தமாக சரிந்து போக இருக்கும் நிலையில் நீங்கள் உங்களுடைய வருமானத்தால் அவர்களை தலை நிமிராக செய்யப் போகிறீர்கள் என்று கதை கூறினார்களாம்.

மனது மாறிவிட்டது
ஆனால் தன்னிடம் சொன்ன கதை அப்படி வரவே இல்லை. சிறிது நாட்கள் அந்த மாதிரி கதை வர இருந்தது. ஆனால் பிறகு அப்படியே டோட்டலாக மாறிவிட்டது. தற்போது கதை வேறு விதமாக போய்க் கொண்டிருக்கிறது. நான் இந்த சீரியலில் இருந்து விலகி விடலாம் என்று முடிவு இப்போதுதான் எடுத்து இருக்கிறேன். அதற்கு முன்பு பலமுறை என்னிடம் சொன்ன கதை எப்போது வரும் என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆரம்பத்தில் அதிகமாக எதிர்பார்த்த நான் பிறகு சரி சீரியல் தரப்பில் இருந்து என்ன சொல்கிறார்களோ அப்படியே நடிக்கலாம் என்று முடிவுக்கு வந்து விட்டேன்.

கதை மாறப்போகிறது
ஆனால் இனி வரும் காலத்தில் கதை வேறு விதமாக போக இருக்கிறது. அது என்னுடைய பர்சனல் கேரக்டரை பாதிக்கும் விதத்தில் இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. இதுவரைக்கும் சாய் காயத்ரி என்றால் ரசிகர்களின் மத்தியில் ஒரு கேரக்டர் இருக்கிறது. ஆனால் இனிவரும் கேரக்டரால் என்னுடைய இமேஜ் மாற இருக்கிறது. அது எனக்கு என்னுடைய வாழ்க்கைக்கு செட் ஆகாது என்று நான் பீல் பண்ணுகிறேன். அதனால் தான் விஜய் டிவி டீமிடமும், சீரியல் டீம் இடமும் பேசிவிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதுவரைக்கும் எனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி என்று இவர் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications