எத்தனையோ அவமானங்கள்.. ஆனாலும் எதிர்த்து ஜெயித்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிகை சல்மா அருண் நடித்து வருகிறார். இவர் தான் புதியதாக வாங்கிய கார் வீடியோவை மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

வாய்ப்பும், திறமையும் இருந்தால் அதற்கு வயது ஒரு தடையே இல்லை என்று பலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு சரியான வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நடிகை சல்மா அருண் கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகுதான் சீரியல் நடிக்க தொடங்கி இருந்தார்.

television siragadikka aasai serial vijay tv

அதிலும் ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகி அமுதாவின் அண்ணி கேரக்டரில் நடித்திருந்தார். முதல் சீரியலிலேயே வில்லியாக நடித்தால் இனி எல்லா சீரியலிலும் அதுபோலத்தான் வாய்ப்பு வரும் என்பது பலருடைய கணக்கு, ஆனால் எனக்கு எது கிடைத்தாலும் என்னால் பெஸ்ட் கொடுக்க முடியும் என்று சல்மா கலக்கி கொண்டு இருந்தார்.

முதல் சீரியலை விடவும் சல்மாவிற்கு பெரிய அளவில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியல் கிராமப்புறங்களிலும் மற்றும் நகரப்புறங்களிலும் பலர் பார்த்து வருகிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

அதனால் இந்த சீரியலில் நடிக்கும் சின்ன சின்ன நடிகர்கள் முதல் முக்கிய கேரக்டர் வரை எல்லோரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அதிலும் ரோகிணியாக நடிக்கும் சல்மாவிற்கு இந்த சீரியல் பெரிய பிரபலத்தை கொடுத்து விட்டது. இந்த சீரியலில் நடித்த பிறகு இவரை ரோகிணி என்றே பலர் கூப்பிட்டு வருகிறார்கள்.

அதோடு சிலர் முத்து கூப்பிடுவது போல பார்லர் அம்மா என்றும் கூப்பிட்டு வருகிறார்கள். இந்த சீரியலில் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் ரோகிணி மனோஜ் குடும்பத்தை ஏமாற்றி மனோஜை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த ரோகிணி தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

இதனால் பார்ப்பவர்கள் எல்லோரும் ரோகிணியை திட்டி தீர்த்து வருகிறார்கள். அது எல்லாமே தன்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று சல்மா அடுத்தடுத்து தன்னுடைய பயணத்தை தொடங்கி கொண்டிருக்கிறார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலிலும் சல்மா விரைவில் அறிமுக இருப்பதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர் இன்னும் அதிகரிக்கவில்லை.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சல்மான் புதியதாக கார் ஒன்று வாங்கி இருக்கிறார். அந்த கார் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் சல்மாவின் கணவர் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இவருடைய இந்த வளர்ச்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+