சிலரால் தான் இப்படி செய்தேன் ஆனால் இப்போது..! மனம் திறந்த சம்யுக்தா.. "அதை” கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் டெலிட் செய்த புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்து இருக்கிறார்.

தன்னுடைய மனநிலை குறித்தும் அதில் விளக்கமாக கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் தன்னைப் பற்றி புகழ்ந்தவர்கள் கூட இப்போது என்னைப் பற்றி தவறாக பேசுகிறார்கள் என்று அதில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

Actress Samyuktha deleted post reposted the photos

சமூக வலைத்தளத்தை திறந்தாலே அதில் அதிகமாக இப்போது சின்னத்திரை நடிகை ஆன சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் குடும்ப பிரச்சனை தான் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையில் இருவரும் மாறி மாறி குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றனர்.

சம்யுக்தா நிறைமாத நிலவே என்ற வெப் சீரிஸ் மூலமாக அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்கள் நடித்திருக்கிறார். இப்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவரைப் பற்றிய ஆடியோக்களை இவருடைய கணவர் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவருடைய முன்னாள் காதல், அதற்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சனை என பல ரகசியங்கள் வெளி வந்திருக்கிறது. இதை குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் சம்யுக்தாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளிக்கும் சம்யுக்தா அதை ஸ்கிரீன்ஷாட் ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்.

இன்று பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் வாங்கிய விருது மற்றும் அது குறித்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதோடு அதில் கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதில், எதிர்பாளர்கள் என் மீது ஆயிரம் புகார் கூறலாம். ஆனால் இந்த இடத்தை அடைய நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது யாருக்கும் தெரியாது.

"I got this reward for my hamy ave on me". எப்போதும் எனக்காக இருப்பதற்காகவும் என்னை நம்பி என்னை இதுவரைக்கும் ஆதரவு கொடுத்து வரும் என்னுடைய அன்பான குடும்பத்திற்கும் நன்றி. அது அது போல போன வருஷம் தனியார் சேனல் எனக்கு பிடித்த ஹீரோயின் என்ற இந்த விருதை கொடுத்தது. இப்போது அதே மீடியாக்கள் தான் என் தரப்பில் ஒரு உண்மை கூட தெரியாமல் என்னை பற்றி இழிவு படுத்துகிறது.

Actress Samyuktha deleted post reposted the photos

யார் மீடியாவுக்கு முதலில் போனாலும் அதுதான் உண்மை என்று இந்த சமூகம் அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு கொடுமையான உலகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல உள்ளம் படைத்தவர்களால் இந்த சமுதாயத்தில் நிம்மதியாக வாழ முடியாது என்பது எனக்கு இப்போ நல்லா புரிகிறது. இன்னைக்கு பலர் மற்றவர்களின் வாழ்க்கையை சீரழித்து அதில் வரும் மகிழ்ச்சியை கொண்டாடுவதில் சந்தோஷம் கொள்கிறார்கள்.

மோசமான கேரக்டர் கொண்டவர்கள், பிறர் வாழ்க்கையை கெடுக்கும் தீய செயல்களை செய்பவர்கள் தான் இந்த சமுதாயத்தில் நல்ல பெயரை பெறுகிறார்கள். எல்லோரும் அவர்களைத்தான் நம்புகிறார்கள். இது ஒரு அவமானம் தான் என் வாழ்வில் பயனற்ற நபர்களை நம்பி நான் கற்றுக்கொண்டு பாடமாகத்தான் இதை நினைக்கிறேன்.

ஆனா ஒன்னு மட்டும் நினைச்சுக்கோங்க. கடவுள் உங்கள் எல்லோருடைய செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். விரைவில் நீங்கள் அனைவரும் உங்கள் பாவங்களுக்கு பரிசு பெறுவீர்கள். இந்த புகைப்படங்களை சில நச்சுத்தன்மை உள்ளவர்களால் நான் இதை நீக்கி விட்டேன். இப்போது நிறைய தைரியம் கொண்ட ஒரு சுதந்திர பெண்ணாக மீண்டும் இதை பதிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+