தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. அரெஸ்ட் பண்ணிடுவேன்னு மிரட்டினாங்க.. பிக் பாஸ் சனம் ஷெட்டி பகீர் வீடியோ
சென்னை: நடிகையாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த சனம் ஷெட்டி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இணையதளம் மூலமாக ஏமாற்றப்பட்டதாக ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் தன்னை போல யாரும் ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் அலர்ட் செய்திருக்கிறார்.
மாடலாகவும், நடிகையாகவும் பிரபலமடைந்த சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அதே நேரத்தில் சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலையில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் தனக்கு இன்று காலையில் ஒரு போன் வந்தது. அதில் தான் மும்பையில் இருந்து ஒரு போலீஸ் ஆபீஸர் பேசுகிறேன் என்று சொல்லியிருந்தார். அதோடு உங்கள் போன் நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல் வந்துள்ளது என்றும் 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே நீங்கள் கைதாக வாய்ப்பு இருக்கிறது என்று மிரட்டினார்கள். அப்போது எனக்கு பயம் வந்துவிட்டது என்னவென்று விஷயம் கேட்டபோதும் உங்கள் போன் நம்பருக்கு ஏகப்பட்ட புகார் வந்துள்ளதால் உங்களுடைய முழு தகவல்கள் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கா விட்டால் உங்கள் சிம் முடக்கப்பட்டு விடும் என்று கூறினார்கள்.
நடிகைகளின் புகார்களால் திணறும் கேரள திரையுலகம்.. அங்கு நடப்பது இதுதான்! வெளிப்படையாக பேசிய ஊர்வசி
அப்போதுதான் நமக்கு சிம் வாங்கும்போது நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு கொடுத்துள்ளோமே அப்படி இருக்கும்போது எதற்காக ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கேட்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு நான் போனை கட் செய்து விட்டேன். முதலில் அவர்கள் போன் செய்தபோது எனக்கே பயம் வந்துவிட்டது.

அவர்கள் என்னை பயமுறுத்துற மாதிரி தான் போன் செய்தார்கள். நாம் சமூக வலைதளத்தை பற்றியும் அதில் நடக்கும் வேலைகள் பற்றியும் தெரிந்திருந்தாலும் முதலில் நானே அது உண்மைதானோ என்னவோ என்று பயந்துவிட்டேன். ஆனால் அது பற்றி எனக்கு தெரிந்த ஒருவரிடம் நான் விசாரித்தேன் அப்போது அவர்கள் எனக்கு சில அதிர்ச்சிகரமான விஷயங்களை சொன்னார்கள். அதாவது இதுபோல எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு போன் வந்து இருக்கிறது.

அப்போது எதிர் தரப்பில் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ததும் அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டதாகவும் அவர் என்னிடம் சொன்னார். இது போன்ற மிரட்டல் கால் வந்தால் எந்த ஒரு லிங்கையும் தயவு செய்து கிளிக் செய்து விடாதீர்கள் எனவும் அப்படி கிளிக் செய்துவிட்டால் நம்முடைய போன் கேங் ஆகிவிடும் நம்முடைய பேங்க் டீடைல்ஸ் எல்லாம் மோசடி நபருக்கு தெரிந்து விடும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இப்போது இந்த வீடியோவை அவசரமாக வெளியிட்டேன் என்று சனம் ஷெட்டி பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications