Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகைகளின் புகார்களால் திணறும் கேரள திரையுலகம்.. அங்கு நடப்பது இதுதான்! வெளிப்படையாக பேசிய ஊர்வசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள உலகம் பெரும் பரபரப்பை அடைந்திருக்கிறது. பல நடிகைகள் தொடர்ச்சியாக புகார்கள் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மலையாள திரை உலகம் பற்றி நடிகை ஊர்வசி பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அது பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.

பெண்களுக்கு பல்வேறு துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கும் நிலையில் சினிமா துறையில் இருப்பவர்கள் ஒரு சிலர் அது பற்றி தைரியமாக பேசி வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் வெளியே சொல்வதற்கு பயந்து போய் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டது. அது மலையாள சினிமாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

television

இந்த விவாகரத்தால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து அவர் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மா சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புது தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் அம்மா சங்கம் கலைக்கப்பட்டு இருந்தாலும் ஹேமா கமிஷன் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கேரளாவில் சினிமா உலகில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு என்கிற நிலை இருக்கிறது என்று அம்பலப்படுத்தி இருந்த நிலையில் இனி யாரும் இதுபோல பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இது பற்றி நடிகை ஊர்வசி பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அது பற்றி அவர் பேசுகையில் இந்த அறிக்கை வெளியானதில் இருந்து கேரளா சினிமாவில் மட்டும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை நடப்பதாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது நிச்சயமான உண்மை கிடையாது. இது எல்லா துறைகளிலும் நடக்கிறது. வட மாநிலங்களிலும் கூட நடக்கிறது.

television

மருத்துவமனை, கல்லூரி, ஆண், பெண் என எல்லோருக்குமே இந்த மாதிரி தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கேரளாவில் இருக்கும் பெண்கள் தான் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நடந்த அநியாயங்கள் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஒரு பெண் நடிகை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் வெளியே வந்து சொல்ல தொடங்கியதும் மற்ற நடிகைகளும் நாங்களும் இதுபோல பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

இதற்கு அரசும் துணையாக இந்த கமிட்டியை அமைத்தது. மலையாளத் திரை உலகில் இருக்கும் பெண்கள் தைரியமான பெண்களாக இருந்ததால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதனால் மலையாள சினிமாவில் மட்டுமே இப்படி நடந்து இருக்கிறது என்று சொல்ல முடியாது. மற்ற மொழி சினிமாக்களில் யாரும் சொல்ல முன்வரவில்லை என்பதுதான் உண்மை.

அதே நேரத்தில் ஹேமா அறிக்கை முழுமையாக எல்லோருக்கும் தெரியாது. அந்த அறிக்கையில் சில நடிகைகள் மட்டும் பேசி இருக்கிறார்கள். அதில் அவர்கள் அடிப்படை வசதி இல்லை, சம்பளம் சரியாக தருவதில்லை, சில நேரங்களில் இரவில் வீட்டு கதவை தட்டுகிறார்கள் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது. ஒரு சில பெண்கள் தங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்கள்.

television

ஆனால் ஒரு பெண் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு ஆண் உடனே குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. அந்த புகாரை தீர விசாரித்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகையிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்று மிரட்டி பணிய வைக்கும் பட்சத்தில் அது நீதிமன்றத்தின் மூலமாக கொண்டு வரப்படும். அப்போது மீண்டும் ஒரு வெடி வெடிக்கும்.

இப்போது ஹேமா அறிக்கை வெளியானதை தொடர்ந்துதான் ஒரு பரபரப்பு இருக்கிறது. ஆனால் இன்னும் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும் நான் சினிமாவில் இத்தனை வருடங்கள் இருக்கிறேன். எனக்கு இது போன்று எந்த ஒரு அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகளும் வந்தது கிடையாது. எந்த இடத்திலும் நாம் நம்முடைய முடிவிலும் தைரியமாக இருக்க வேண்டும்.

பொதுவாக நடிகைகள் கதை கேட்பதற்காக ஒரு இயக்குனரை தனியாக சந்திக்க வேண்டும் என்றால் எந்த ஒரு ரூமிற்க்கோ, லாட்ஜ்க்கோ சொல்லக்கூடாது. பொது இடத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள். இல்லை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னால் துணைக்கு யாராவது ஒருவரை கூட்டிக்கொண்டு செல்லலாம். இது நடிகைகளுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.

ஒரு ஆண் நான்கு பேர் இருக்கும் இடத்தில் நம்மிடம் பழகும் விதம் வேறு மாதிரி இருக்கும். அதே நேரத்தில் தனியாக இருக்கும்போது அவருடைய மனம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் பெண்ணால் ஒரு இடத்தில் தைரியமாக போராட முடியாது என்றால் அங்கு இன்னொருவரை துணைக்கு கூட்டிட்டு போவது தப்பு கிடையாது.

அதற்காக நான் பெண்கள் பழைய நிலையில் தான் இருக்க வேண்டும் இன்னும் ஒருவரை நம்பி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்முடைய சேஃப்டி முதலில் முக்கியம் அதை நாம கவனிக்க வேண்டும் என்று ஊர்வசி பேசி இருக்கும் நிலையில் இது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+