விஜயகாந்த் அந்த மாதிரி கிடையாது.. கண்டிப்பா அவரை பார்த்தால் இதை கேட்பேன்.. நடிகை சங்கீதா ஓப்பன் டாக்
சென்னை: பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை சங்கீதா பல வருடங்கள் கழித்து பேட்டிகளில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் நடிகர் விஜயகாந்த் பற்றியும் அவரோடு நடித்த திரைப்பட அனுபவங்கள் பற்றியும் பேசி இருக்கிறார்.

அப்போது விஜயகாந்த் தன்னை ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார் என்றும் அதே நேரத்தில் இப்போது அவரை நான் நேரில் பார்த்தால் அவரிடம் இந்த ஒரு கேள்வியை தான் கேட்பேன் என்றும் சங்கீதா கூறி இருக்கிறார். அது என்ன கேள்வி என்பதை பார்ப்போம்.
நடிகர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் புது சரித்திரத்தையே படைத்தவர். அவரோடு நடித்த நடிகர்கள் யாருமே அவரை குறை சொல்ல முடியாது என்று சொல்லும் அளவிற்கு தான் வாழ்ந்து காட்டி இருக்கிறார். தான் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னோடு நடித்தவர்களும் தன்னோடு பணியாற்றவர்களும் வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அனைவரிடமும் பாரபட்சமில்லாமல் பழகி அனைவருக்கும் எந்த உதவி என்றாலும் எப்போதும் செய்து வந்திருக்கிறார்.
அதனாலேயே அவரோடு நடித்த பல நடிகர்கள், நடிகைகள் அவரால் உதவி பெற்றவர்கள் தொடர்ச்சியாக அவரைப் பற்றி பல தகவல்களை பேசிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு சிங்கம் போல கர்ஜித்து கம்பீரமாக இருந்த விஜயகாந்த்தின் தற்போதைய நிலையை பார்த்த அவருடைய ரசிகர்களும் அவரோடு பணியாற்றியவர்களும் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.
நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தன்னுடைய தனித்துவத்தை காட்டி தொண்டர்களின் மத்தியில் பெரிய அளவில் விஜயகாந்த் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த்தோடு அலெக்சாண்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதா பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை சங்கீதா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் தமிழில் இவர் குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமடைந்து இருந்தார். அதிலும் அவர் கதாநாயகியாக நடித்த "எல்லாமே என் ராசா" என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு சங்கீதாவிற்கு ஒரு பெரிய பிரபலத்தை கொடுத்தது பூவே உனக்காக திரைப்படம். அதற்குப் பிறகு அடுத்தடுத்து சங்கீதாவிற்கு வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது.
அதிலும் சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, புள்ள குட்டிக்காரன், சீதனம், காலம் மாறிப்போச்சு, அலெக்சாண்டர், கங்கா கௌரி என பல படங்களில் நடித்திருந்தார். அதில் அலெக்சாண்டர் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது பற்றி தான் பல வருடங்கள் கழித்து சங்கீதா மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அந்தப் படத்தில் நடிக்கும் போது சங்கீதாவை விஜயகாந்த் எப்போதும் கிண்டலடித்துக் கொண்டுதான் இருப்பாராம். கம்பீரமாக ஒரு சிங்கத்தை பார்ப்பது போல தான் நடிகர் விஜயகாந்த இருப்பார். நான் அப்படித்தான் அவரை பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் நான் அவரை சந்திப்பதை விரும்பவில்லை. உடல்நிலை சரியில்லாதவர்களை பார்ப்பதற்கு ரொம்பவே கஷ்டப்படுவேன். அதனால்தான் விஜயகாந்த் சாரை சென்று நேரில் பார்க்கவில்லை.

ஆனால் அவரை சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் கண்டிப்பா அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்பேன். அது என்னன்னா என்னை எப்போதும் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் மஹால் எக்ஸ்பிரஸ் என்று தான் கூப்பிடுவார். ஆனா அப்போது எனக்கு அதற்கு அர்த்தம் என்னவென்று தெரியாது. அதற்கு பிறகு தான் தெரியும் அது மிகவும் மிக மெதுவாக போகக் கூடியது என்பது, ஆனால் அதை வைத்து என்னை எதற்கு கூப்பிட்டார் என்று நான் கேட்டு கேட்க வேண்டும்.
அதுபோல சிலர் பேட்டியில் ஒரு சிலரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஆனால் நிஜத்தில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் எல்லாம் கிடையாது. ஆனால் விஜயகாந்த் உண்மையில் 100% சதவீதம் உண்மையானவர். உதவி என்று கேட்டவர்களுக்கு ரொம்பவே கேரிங்காக உதவி செய்யக்கூடியவர். சாப்பாடு விஷயத்தில் எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்வார். ஆனால் அவருடைய நிலைமையை நினைத்துப் பார்க்கும்போதுதான் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகை சங்கீதா ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications