பொன்வண்ணனின் வசந்த மாளிகை! இந்த பொருளை மட்டும் கெஞ்சி கேட்டு வாங்கினேன்! சரண்யா ஹோம் டூர்
சென்னை: கணவரின் வசந்த மாளிகை என அவருடைய அறையையும் அங்கிருந்த ஓவியங்களையும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது ஹோம் டூர் வீடியோவில் காட்டியுள்ளார். தனது கணவர் தீட்டிய ஓவியங்களை காட்சிப்படுத்தலாம் என்ற திட்டம் உள்ளது என்றும் சரண்யா தெரிவித்தார்.

சரண்யா பொன்வண்ணன் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர். இவர் நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சரண்யா, தையல் கலை மீதான ஆர்வத்தால் தனது வீட்டின் மாடியில் தையல் வகுப்புகளை எடுத்து வருகிறார். இவரது தையல் பள்ளியில் படிக்கும் பலரும் பெண் தொழில் முனைவோர்களாகிறார்கள். தையலில் தனக்கு தெரிந்த அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தருகிறார்.
10 ஆண்டுகள்
இந்த பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அண்மைக்காலமாக ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இவர் எம் மகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றார். அது போல் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
டூர் வீடியோ
இவரது வீட்டு ஹோம் டூர் வீடியோவை ஜேஎஃப்டபிள்யூ எனும் யூடியூப் சேனல் வழங்கியுள்ளது. அந்த வீடியோவில் சரண்யா முதலில் ஒரு அறையை காட்டுகிறார். அது பொன்வண்ணனுக்கு மிகவும் பிடித்தமான இடம் என்கிறார். அங்கு ஏராளமான நூல்கள் உள்ளன. மேலும் ஓவியங்களும் காணப்படுகின்றன.
கணவருக்கு ஆர்வம்
இவற்றின் மீது தனது கணவருக்கு ஆர்வம் அதிகம் என்றார். மேலும் அவர் அரைகுறையாக விட்ட ஓவியத்தை எப்போது முடிப்பார் என நான் ஆவலுடன் காத்திருப்பேன். அவர் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். அது ஒரு நாள் நடக்கும். இது என் கணவரின் வசந்த மாளிகை.
புத்தகங்கள் படிப்பது
இந்த அறையில் அவருக்கு பிடித்தமான ஏராளமான புத்தகங்களை படிப்பார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியங்களை வரைவார் என்றார். பின்னர் தனக்கு மிகவும் பிடித்த தையல் அறையை காட்டினார். அங்கு பட்டன் அடிக்கும் மெஷின், ஓவர்லேப் செய்யும் மெஷின்களையும் அவர் காட்டினார்.
தையல் மெஷின்
அங்கு தனது மாணவர்கள் கொடுத்த பரிசுகளையும் பெருமை பொங்க காட்டினார். மேலும் தையல் மெஷின் போல் இருந்த ஒரு பொம்மையை காட்டினார். அதை யாரிடமோ கெஞ்சி கேட்டு வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். எல்லா மெஷின்களுக்கும் அவரே கவர் தைத்து போட்டுள்ளார். அது போல் பூஜை அறையை காட்டினார். "எனது கணவர் இந்து, நான் ரோமன் கத்தோலிக் பிரிவு. இருவரும் மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் நாங்கள் அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வோம். எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவோம். " என்றார்.
ஏசு ஓவியம்
தனது கணவர் ஏசு கிறிஸ்துவை ஓவியமாக தீட்டியிருப்பதை பூஜை அறையில் வைத்திருந்தார். அங்கிருந்த சுவாமி சிலைகளை காண்பித்தார். பின்னர் தனது தாயின் புகைப்படத்தையும் காட்டினார். நிறைய பேர் கடவுள் சிலையுடன் இறந்தவர்களின் புகைப்படத்தை வைக்கக் கூடாது என்றார்கள். ஆனால் அதையெல்லாம் கேட்கவில்லை. அது போல் ஒரு பெரிய சிலையை மேலே கொண்டு போய் துணி துவைக்கும் கல்லில் வைத்து தண்ணீரை டியூபில் பீய்ச்சி அடித்துதான் சுத்தப்படுத்துவேன். அதையும் செய்யக் கூடாது என்பார்கள். ஆனால் நான் இன்று வரை நன்றாகத்தான் இருக்கிறேன். எல்லாம் நம் மனம்தான் காரணம், எனக்கு பிடித்த கடவுளை நான் சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? என்றார்.
ரஜினியின் ரசிகை
"2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்றுக்கு மாநில விருதை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இருந்து வாங்கினேன். அருகே ரஜினிகாந்த் இருக்கிறார். நான் அவருடைய மிகப் பெரிய ரசிகை" என்றார். பின்னர் தனது வீட்டின் மேல் உள்ள டிசாஃப்ட் எனும் ஆடை வடிவமைப்பிற்கான பள்ளியை காட்டி, அங்குள்ள ஆசிரியைகளை அறிமுகப்படுத்தினார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications