நடிகை சரோஜாதேவி, ராஜீவ் காந்திக்கு செய்து கொடுத்த சத்தியம்.. இப்ப வரைக்கும் மீறல..இதுதான் காரணமா?
சென்னை: சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சரோஜாதேவி தான் ராஜீவ் காந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைசி வரைக்கும் மீறவில்லை என்று கூறி இருக்கிறார்.
ஒரு நடிகையாக பிரபலமான சரோஜாதேவி அரசியல் பிரமுகரோடு இப்படி ஒரு உடன்படிக்கை செய்து இருக்கிறாரா என்பது பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.
70ஸ் 80ஸ் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த நடிகை சரோஜாதேவி அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று புகழப் பெற்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் சரோஜாதேவி நடித்திருக்கிறார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த சரோஜாதேவி விஜய், அர்ஜுன், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது நடைக்கு என்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இவருடைய கொஞ்சலான தமிழும் பலருடைய மனதை கவர்ந்தது தான்.
சரோஜாதேவி என்றுமே கவர்ச்சியாக உடை அணிந்து நடித்ததில்லை ஆனால் அவர் எந்த உடை அணிந்தாலும் கவர்ச்சியாக இருக்கும் என்று இவருடைய தீவிரமான ரசிகர்கள் சொல்வதுண்டு. இந்த நிலையில் இப்போதும் இவரை பல ரசிகர்கள் மிஸ் பண்ணி வருவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து பல தகவல்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அரசியலுக்கு வராத காரணத்தை பற்றியும் சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒருமுறை சரோஜாதேவியை டெல்லிக்கு அழைத்த ராஜீவ் காந்தி மைசூரில் மண்டியா என்ற பகுதியில் போட்டியிட சொன்னாராம்.

ஆனால் சரோஜாதேவி நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் ஒரு தரப்பினருக்கு நல்லவராக இருக்கும் இன்னொரு தரப்பினருக்கு கெட்டவராக இருக்கும். ஆனால் நான் ஒரு பொதுவான ஆள் எனக்கு அரசியல் வேண்டாம் என்று கூறியிருந்தாராம். ஆனாலும் ராஜீவ் காந்தி சரி ஆனால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டாராம். அதற்கு சரோஜாதேவியும் சத்தியம் செய்து கொடுத்தாராம். இப்ப வரைக்கும் அந்த சத்தியத்தை நான் மீறவே இல்லை என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications