தொட்டு தொட்டு நடிக்காதே.. அத்தனை நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமை: பிரபலம்
சென்னை: சாதாரண குடும்ப பெண்களுக்கே, சந்தேக புத்தி புருஷனிடம் பல கொடுமைகள் ஏற்படும்போது, நடிகைகளுக்கு இந்த டார்ச்சர்கள் அதிகமாகவே இருக்கும்.. எத்தனையோ நடிகைகள், தங்கள் கணவரின் சந்தேகத்துக்கு ஆளாகி, சித்ரவதையை அனுபவித்துள்ளனர்.. ஆனால், அவர்கள் வெளியே அதை சொல்வதில்லை.. நடிகை சசிகலாவின் குடும்ப வாழ்க்கையும் அப்படித்தான்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "நடிகை சசிகலாவின் ஒரிஜினல் பெயர் சசி கவுர் மல்கோத்ரா.. இதில் மல்கோத்ரா என்பது அவரது அப்பாவின் பெயர்.. அப்பா வடமாநிலத்தை சேர்ந்தவர்.. அம்மா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.. சினிமாவுக்காக மணிவண்ணன் சசிகலா என்ற பெயரை வைத்தார்..
நடிகர் மோகன் அப்போது பீக்கில் இருந்தார்.. இளமைக்காலங்கள் என்ற படத்தில் சசிகலா அறிமுகமானார்.. மோகன் - சசிகலா ஜோடி ரசிகர்களால் கவரப்பட்டது.. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்.. ஈரமான ரோஜாவே பாட்டு இப்போதும் ரொம்ப பேமஸ்.. முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால், இதற்கு பிறகு பல படங்களில் கமிட் ஆனார் சசிகலா.. சங்கர் குரு, குவா குவா வாத்துகள், ஊமை விழிகள், வெற்றிவிழா என பல படங்களில் நடித்தார்..

ராஜேந்திர பிரசாத்துடன் காதல்?
தமிழில் இவருக்கு சசிகலா என்று பெயர், தெலுங்கில் ஏற்கனவே ஒரு சசிகலா இருந்தால் ரஜினி என்று பெயரை மாற்றிக் கொண்டார்.. தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்தார்.. அந்தவகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 150 படங்களுக்கு மேல் நடித்தார்,.. பெரும்பாலும் மாடர்ன் டிரஸ்ஸில் நடித்தவர்.. அதில் சற்று கிளாமராகவும் நடித்தார்.. அவை ரசிக்கும்படியாகவே இருந்தன. ஆரம்பத்தில் மோகனுடன் கிசுகிசு வந்தது.. அதேபோல, ராஜேந்திர பிரசாத்துடன் சசிகலாவுக்கு கிசுகிசு வந்தது..
1983ல் சினிமாவுக்குள் வந்தார் சசிகலா.. 1993-ல் திருமணம் செய்து கொண்டார்.. பெற்றோர் பார்த்து சசிகலாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்... இந்த தம்பதிக்கு 2 மகன்கள் ஒரு மகள் இருக்கிறார்.
சந்தேக பிடியில் சிக்கிய சசிகலா
கணவரின் கட்டுப்பாடு சசிகலாவுக்கு அதிகமாகிவிட்டது.. ஊர் மரியாதை என்ற படத்தில். கணவரை சந்தேகப்படும் மனைவியாக சரத்குமாருடன் சசிகலா நடித்திருப்பார். ஆனால், நிஜ வாழ்க்கையில், மனைவியை சந்தேகப்படும் கணவன் அமைந்துவிட்டார். திருமணத்துக்கு பிறகு, கணவருக்கு கட்டுப்பட்டே வாழ்ந்தார்..
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.. ஆனால், நாளடைவில் கணவரின் புத்தி வேறுமாதிரியாகிவிட்டது.. சந்தேகக் கண்ணோட்டம் அதிகமாகிவிட்டது. இதுபோன்ற பல நடிகைகைள் கணவரின் சந்தேகத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.. ஆனால், பலரும் வெளியே அதை வெளியே சொல்வதில்லை..
சுஜாதா, வாணிஸ்ரீ
நடிகை சுஜாதா காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், அவருக்கும் இப்படித்தான் கணவரால் டார்ச்சர் தரப்பட்டது.. ஆனால், அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.. வாணியும் 2 குழந்தைகளுடன் தனியாக வந்துவிட்டார். அதேபோலதான், சசிகலாவும் கணவரின் டார்ச்சர் தாங்கமுடியாமல் நான்கைந்து வருடங்களில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
ஒளி இல்லம் என்ற கிறிஸ்தவ இல்லத்துக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கே ஒரு பெண் என்னிடம், கணவரின் சித்ரவதைக்கு ஆளாகி, தன் உடம்பு முழுவதும் சிகரெட் சூட்டுக்கு ஆளானதை சொன்னார்.. அந்த பெண்ணின் மார்பு, முகம், தொடை, உள்ளிட்ட பகுதிகளில் சிகரெட் சூடு காணப்பட்டது.. சாதாரண குடும்ப பெண்ணுக்கே, சந்தேக புருஷனிடம் இப்படி நிலைமை இருக்கும்போது, பல நடிகர்களுடன் ஒன்றாக நடித்த நடிகைகளுக்கு டார்ச்சர்கள் இன்னும் அதிகமாகவே இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications