பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்! பல ரகசியங்களை உடைத்த நடிகை சத்யா சாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் அரசி கேரக்டரில் நடிகை சத்யா சாய் நடித்து வருகிறார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில் பிறகு எதற்காக சீரியலில் இருந்து விலகி இருந்தார் என்பது பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியதல்ல. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒரு சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகும் போது வேறு பிரபலங்கள் அந்த கேரக்டரில் நடிக்க வருகிறார்கள். அந்த மாதிரி தான் ஜீ தமிழில் ஒளிபரப்பான "அழகிய தமிழ் மகள்" சீரியலில் முதலில் நடித்து வந்த நடிகை ஷீலா ராஜ்குமார் விலகியதும் அந்த சீரியலில் கதாநாயகியாக சத்தியா சாய் நடித்து வந்தார்.

Television

பிறகு அந்த சீரியல் முடிவடைந்ததும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகத்தில் முஸ்லிம் பெண்ணாக சில நாட்கள் மட்டும் நடித்திருந்தார். ஆனால் பிறகு அவர் கேரக்டர் சீரியலில் காட்டாமல் முடித்து விட்டார்கள். இப்போது மீண்டும் இரண்டாவது பாகத்தில் பாண்டியன் மற்றும் கோமதியின் கடைசி மகளாக அரசி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Television

இந்த நிலையில் தான் எதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் இருந்து விலகினேன் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் சத்யா சாய் பேசுகையில் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்னை நடிக்க கூப்பிட்டு இருந்தார்கள். அப்போது நீங்கள் தான் கண்ணனின் ஜோடி, கடைசி வரைக்கும் இந்த சீரியலில் இருப்பீர்கள் என்று சொல்லி தான் எனக்கு எல்லா போட்டோ டெஸ்டுகளும் எடுத்து பார்த்தார்கள்.

Television

விதவிதமாக போட்டோஷூட் எல்லாம் எடுத்திருந்தார்கள். முஸ்லிம் பெண் கேரக்டரில் தான் நான் நடித்து இருந்தேன். மூன்று நாட்கள் சூட்டிங் முடிந்ததும் பிறகு சேனல் தரப்பில் முஸ்லிம் கேரக்டரை வைத்து ஏதோ பிரச்சனை வந்திருக்கிறது. அதனால் இனி இந்த கேரக்டர் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் தான் நான் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தேன்.

Television

ஆனாலும் இரண்டாவது சீசன் தொடங்கப்படும் போது என்னை ஞாபகம் வைத்து என்னிடம் கேட்டார்கள் எனக்கும் ஓகே என்று பட்டதால் நானும் இப்போது இரண்டாவது சீசனில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் சத்யா சாய் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+