மேடையில் பார்த்திபன் சொன்னது எல்லாமே பொய்.. நடந்தது இதுதான்.. ரகசியத்தை உடைத்த நடிகை சீதா
சென்னை: நடிகை சீதா தன்னை பற்றி பார்த்திபன் மேடையில் பேசிய சில விஷயங்கள் பொய் என்று கூறி சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார்.
நடிகை சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். ஆனால் இவர்களுடைய காதல் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டது.
இந்த நிலையில் சீதா மற்றும் பார்த்திபன் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தன்னுடைய காதல் குறித்து பார்த்திபன் சொன்ன விஷயங்களுக்கு சீதா விளக்கம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று குடும்ப பாங்கான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் சீதா. இவர் தமிழில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களின் மனதில் பதித்து போனார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அதோடு சீதா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பலமொழிகளிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சீதா நடித்த புதிய பாதை திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகர் பார்த்திபன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவர்கள் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.
2001 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதற்குப் பிறகு சீதா சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவரோடும் அதிக நாட்கள் வாழாமல் இருந்திருந்தார். கடைசியில் அவரையும் விவாகரத்து செய்து இருந்தார். இந்த நிலையில் தனக்கு பிடித்த சினிமாத்துறையில் செகண்ட் ரவுண்டில் அதிகமாக அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பார்த்திபன் சில மேடைகளில் சீதாவின் காதலை தான் ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருந்ததாக பேசி இருக்கிறார்.. இந்த பேச்சு சீதாவை கோபப்பட வைத்திருக்கிறது. அதற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீதா பதிலளித்திருக்கிறார். அதில் பார்த்திபன் சொல்வது அப்பட்டமான பொய் என்று கூறியிருக்கிறார்.

அதோடு பார்த்திபன் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை சீதா உடன் போனில் பேசும்போது அந்த மூன்று வார்த்தையை கூறுமாறு அடிக்கடி சொல்லுவாராம். ஆனால் சீதா ஐ லவ் யூ எனும் அந்த மூன்று வார்த்தை சொல்லவே கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் அதற்கு பிறகு தான் தன்னுடைய காதலை தெரிவித்தாராம். ஆனால் இருவருக்கு இடையே இருந்த காதல் உண்மை என்றும் அதனால் நான் அதனால் தான் பார்த்திபன் தன்னிடம் அந்த மூன்று வார்த்தையை கூறும்படி அடிக்கடி கேட்டார் என்றும் சீதா பேசியிருக்கிறார்.
ஆனால் பார்த்திபன் மேடைகளில் சீதாவின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன் என்று சொன்னது கண்டிப்பாக போய் என்றும் அந்த பேட்டியில் சீதா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல தான் நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை இல்லை. திருமணத்திற்கு பிறகு நாம் எப்படி எல்லாமோ இருக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அது எல்லாமே நடக்கவில்லை என்ற போது தான் எனக்கு அந்த திருமண வாழ்க்கையில் விரத்தியே ஏற்பட்டது என்றும் சீதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications