நடிகை சீதா வீட்டில் நடந்த துயரம்.. கண் கலங்கி அவரே வெளியிட்ட பதிவு.. இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகை சீதாவின் அம்மா இன்று காலமாகி இருக்கிறார். அது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை சீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்த நடிகை சீதா அந்த காலகட்டத்தில் இளைஞர்களை தன் வசம் கவர்ந்து விட்டார். அதோடு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சீதா பிரபலமடைந்திருக்கிறார். தமிழ், மலையாளம் ,தெலுங்கு சினிமாக்களில் அதிகளவில் நடித்திருக்கிறார்

1985 ஆம் ஆண்டில் நடிக்க துவங்கிய சீதா அப்போது முதல் இப்போது வரைக்கும் கதாநாயகி ஆகவும், குணசித்திர நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் 1985 லிருந்து 1991 ஆம் வரை நடித்து வந்த சீதா பிறகு நடிப்புக்கு இடைவெளி கொடுத்து இருந்தார். அதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு மாறன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
அதுபோல தமிழ் சினிமாவில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சீதா அறிமுகமாகி இருந்தார். முதல் திரைப்படத்தில் அப்பாவி பெண் கேரக்டரில் பாவாடை தாவணியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சீதா அதற்கு பிறகு மாடர்ன் உடைகளிலும் கலக்கி இருக்கிறார். ஆனால் ஆபாசம் அதிகம் இல்லாத உடை அணிந்து நடித்திருப்பார்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற இவருடைய சிரிப்பு மற்றும் முக அழகு ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டது. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் நடிகை சீதாவின் அம்மா வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்திருக்கிறார். இது குறித்து சீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக பதிவிட்டு இருக்கிறார். தன்னுடைய அம்மாவோடு விருகம்பாக்கத்தில் சீதா வசித்து வந்த நிலையில் இன்று காலை அவருடைய அம்மா காலமாகி இருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டு "இன்று எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் காலமானார்" என்று சீதா கூறி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்புதான் சீதாவின் இரண்டாவது மகள் அபிநயா தன்னுடைய அப்பா பார்த்திபனோடு எடுத்த புகைப்படத்தையும், அம்மா சீதாவோடு எடுத்த புகைப்படத்தையும் மெர்ஜ் செய்து போஸ்ட் போட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீதாவின் வீட்டில் அவருக்கு உறுதுணையாக இத்தனை வருடங்களாக இருந்த அவருடைய தாயார் மறைவு செய்தி சீதாவின் ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications