அப்போ ஷகிலா சொன்னது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன? சாபம் விட்டு பயில்வான் சொன்ன வார்த்தை
சென்னை: நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கலைஞர் டிவியில் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அவரிடம் நடிகை ஷகிலா அவருடைய மகள் குறித்து பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்போது என்ன நடந்தது என்பது குறித்து பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதனுக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவையில்லை. அவர் நடித்து பெயர் வாங்கியதை விடவும் இப்போது youtube சேனல்களில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி பெரிய அளவில் பிரபலமாகி கொண்டிருக்கிறார். பலர் இவருடைய வீடியோவை பார்த்து கழுவி ஊத்தி வந்தாலும் அதை கண்டுகொள்ளாத பயில்வான் தொடர்ச்சியாக நடிகைகளை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.

அதே நேரத்தில் இவர் நடிகைகளை பற்றி பேசுவதை கேட்டு கடுப்பான சில நடிகைகள் இவர் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பயில்வான் அதை கண்டு கொள்வது கிடையாது. நடிகைகளே அவர்களைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டும்போது நான் என்ன செய்ய முடியும். அதனால் தான் நான் என்னுடைய சேனல் மூலம் அவர்கள் பெற்றி பல விஷயங்களை எடுத்துக் கூறுகிறேன் என்று அசால்டாக பயில்வான் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் நடிகை குயிலி தொகுத்து வழங்கும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகிலா நீங்க நடிகை வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறீர்களே? உங்கள் வீட்டில் என்ன நடக்கிறதுனு உங்களுக்கு தெரியுமா? உங்க கடைசி பொண்ணு யாரை லவ் பண்றாங்கனு தெரியுமா? உங்க பொண்ணு இன்னொரு பொண்ணை தான லவ் பண்றாங்க?
அந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி கேட்க அதைக் கேட்டு பயில்வான் அப்போதே கோபப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விஷயம் பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இப்போது பயில்வான் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் உங்கள் மகள் பற்றி ஷகிலா சொன்னது உண்மையா என்று கேட்க அதற்கு கோபமான பயில்வான் இந்த கேள்வியை மட்டும் கேட்காதீங்க என்று எழுந்து போக போகிறார்.
அதற்கு நிருபர் அப்போ ஷகிலா சொன்னது எல்லாம் பொய்யா? உண்மையில் அன்று என்ன நடந்தது? உங்க பொண்ணு இன்னொரு பெண்ணிடம் என்ன பேசினாங்க என்று கேட்க, அதற்கு ஒரு பயில்வான் ஷகிலா வேண்டுமென்றே இந்த மாதிரி புகார் கூறுகிறார். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார் என்று சொல்ல, அதற்கு குறிப்பிட்டு பேசிய நிருபர் நான் ஒரு கேள்வி கேட்கும் போது அதை முழுவதுமாக கேட்காமல் நீங்கள் எழுந்து போக போறீங்க.
இது மாதிரி தானே எல்லா நடிகைகளின் மனநிலையும் இருக்கும். அவர்களின் அந்தரங்க விஷயத்தையும் அவர்களின் சொந்த விஷயத்தையும் நீங்கள் கூறும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அது உங்களுக்கு தப்பா தெரியலையா? என்று கேட்க பயில்வான் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு என்னுடைய பொண்ணை பார்த்து தப்பா பேசினா அந்த நடிகையின் நாக்கு அழுகி போய்விடும்.
அவங்களை பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும். இப்போ பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்னை பத்தி பேசி இருக்காங்க என்று அந்த நிகழ்ச்சியில் கோபமாக பேசி இருக்கிறார். அதோடு ஷகிலாவிற்கு சாபம் விட்டும் அவர் பேசியிருக்கிறார் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications