வனிதா தெய்வமா? குடும்ப பெண்ணா? இப்படி கேட்குறீங்களே கோபப்பட்ட ஷகிலா.. “தம்” பிரச்சனை!
சென்னை: நடிகை ஷகிலா கடைசி தோட்டா திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரஸ் மீட்டிங் பேசும்போது நடிகை வனிதா விஜயகுமார் பற்றி பேசியது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி தோட்டா திரைப்படத்தில் பெண்கள் சிகரெட் புகைப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு ஷகிலா கோபமாக பதில் கொடுத்திருக்கிறார்.
நடிகை ஷகிலா மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து அவர் கவர்ச்சியான கேரக்டரில் நடித்ததார். இப்ப வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஷகிலா என்ற பெயரை சொன்னதும் கவர்ச்சி நடிகை என்ற ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

பிரபலம் கொடுத்த குக் வித் கோமாளி
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதுவரைக்கும் அவருக்கு இருந்த பின்பம் வேறு விதமாக மாறி இருக்கிறது. அதுபோல இப்போது பல நடிகைகள் நடிகர்களை இன்டர்வியூ எடுத்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவிலும் ஷகிலா பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் நவீன் குமார் இயக்கத்தில், நடிகர் ராதாரவி, நடிகர் ஸ்ரீ, நடிகை வனிதா விஜயகுமார் போன்ற பலர் நடிப்பில் கடைசி தோட்டா என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது.
கடைசி தோட்டா பட ரிவ்யூ
கடைசி தோட்டா திரைப்படத்தை ஷகிலா பார்த்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டு இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
புகை பிடிக்கும் காட்சி
பொதுவாக தமிழ்நாட்டுப் பெண்களை எல்லோரும் தெய்வமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் இந்த திரைப்படத்தில் பெண்கள் புகைபிடிப்பது சர்வ சாதாரணம் என்பது போல காட்டப்பட்டிருக்கிறது. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஷகிலா, "அப்போ வனிதாவை தெய்வமா பாக்குறீங்களா? குடும்ப பெண்ணா பாக்குறீங்களா? நீங்க அப்படித்தான் இவ்வளவு நாளா வனிதாவை பார்த்துகிட்டு இருக்கீங்களா என்று சிரித்தபடியே கேட்டிருக்கிறார்.
ஷகிலா சர்ச்சை பேச்சு
அதற்கு செய்தியாளர் ஒருவர் ஆமா வனிதாவை குடும்பப் பெண்ணா தான் பார்க்கிறோம் என்று சொல்ல, அதற்கு ஷகிலா எல்லாரும் எப்படி பாக்குறீங்கன்னு சொல்றாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே செய்தியாளர் ஒருவர் மேடம் எல்லாரும் எப்படி பார்க்கிறோம் என்று சொல்கிறார்கள்? என்று கேட்க, அதற்கு ஷகிலா வனிதா பெரிய குடும்பத்து பொண்ணு.
வனிதா பற்றிய விமர்சனம்
அவங்க இதற்கு முன்னாடி இதுபோல சோசியலிஸ்ட் (புகை படிக்கும் காட்சிகளை படத்தில் காட்டியது) பார்த்திருக்கீங்களா? என்று கேட்க, அதற்கு செய்தியாளர் ஒருவர் அவங்க இதற்கு முன்பு ஒரு படத்தில் இது போன்ற காட்சியில் நடித்திருக்கிறார் என்று சொல்ல, அதற்கு ஷகிலா அப்படியா இதுபோன்ற காட்சிகள் நடிக்க கூடாதா? என்று கேட்கிறார்.
யார் செய்தாலும் தப்பு தானே
அதற்கு செய்தியாளர் ஒருவர் நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தில் அவருடைய பாடல் காட்சியில் அவர் புகைபிடிக்கும் காட்சிகள் வந்த போதே அதிகமானோர் அது தப்பு என்று குரல் கொடுத்தனர். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி புகைபிடிப்பதை படத்தில் காட்டுவது தவறு என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
பாப்புலராக இப்படியா
விஜய் சார் சிகரெட் பிடித்ததையே ரசிகர்கள் திட்டும்போது லேடீஸ் சிகரெட் பிடிப்பதை ரசிகர்கள் திட்டுவார்களே என்று கேட்க, திட்டினால் திட்டட்டும். திட்டினால் தானே நாங்கள் பாப்புலராக முடியும். அதற்காக தானே நாங்கள் இப்படி செய்கிறோம் என்று ஷகிலா அதில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications