விரைவில் குக் வித் கோமாளி சீசன் 6.. அதுவும் எப்போது தெரியுமா? யாரெல்லாம் இருக்காங்க? பிரபலம் ஓபன்
சென்னை: விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து ஆறாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்விக்கு நடிகை ஷகிலா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியை வெற்றி பெற்றுவிட்டார். அதில் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 8 சீசன்கள் முடிவுக்கு வந்திருக்கிறது.

அடுத்த சீசன் எப்போது
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் 5 சீசன்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு வருடத்திலும் ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் அது முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படுமா? இல்லையா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஐந்தாவது சீசன் பஞ்சாயத்து
காரணம் ஐந்தாவது சீசனில் பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டது. அந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இவர்கள் வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் வெளியேறி இருந்தது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளும் விலகி இருந்தனர்.
மணிமேகலையின் திடீர் விலகல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பலர் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். அந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி முடிவடையும் நேரத்தில் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணிமேகலையின் குற்றச்சாட்டு
அதற்கு காரணம் பிரியங்கா என்ற அவர் மறைமுகமாக வைத்த குற்றச்சாட்டு விஜய் டிவி தரப்பு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் இப்போது மணிமேகலை ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக மாறி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியிலும் தன்னுடைய வழக்கமான கலகலப்பாக பேச்சு மற்றும் காமெடியில் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆறாவது சீசன்
அதே நேரத்தில் குக் வித் கோமாளியின் ரசிகர்கள் எப்போது ஆறாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். இது குறித்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஷகிலா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் செஃப் ஆகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜரிடம் பேசினேன்.

அடுத்த தொகுப்பாளர்
அப்போது அடுத்த மாத இறுதியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று சொல்லி கூறினார். வழக்கம்போல கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று ஷகீலா கூறி இருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தர்ஷன் இங்கிருந்து வருகிறார். அவரோடு கடந்த சீசனில் மணிமேகலை தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் இப்போது அவர் விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதில் யார் வரப்போகிறார்கள் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. அதனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications