விவாகரத்து போட்டோ சூட் குறித்து நடிகை ஷாலினி விளக்கம்.. பப்ளிசிட்டிக்காக பண்ணல.. காரணம் இதுதான்
சென்னை: சின்னத்திரை சீரியல் நடிகை ஷாலினி நடத்திய விவாகரத்து போட்டோ சூட் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விவாகரத்து ஃபோட்டோ ஷூட் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஷாலினி எதற்காக தான் அப்படி செய்தேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சீரியல் நடிகை ஷாலினி ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்று சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். அதற்கு பிறகு இவர் பல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஒரு டான்ஸராகவும் இருந்திருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே இவர் படித்திருந்த நிலையில் அதைத்தொடர்ந்து வீட்டில் இவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்களாம்.
ஆனால் அப்போது தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று தான் இவர் வீட்டில் கூறிக்கொண்டு நடிப்பில் தனது திறமையை நிரூபித்து வந்திருக்கிறார். இவருக்கு பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதே நேரத்தில் டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார் .வீட்டிற்கு இவரால் வருமானமும் கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் தான் இவருடைய வீட்டில் இவருக்காக ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அந்த திருமணம் ஒரு சில மாதங்களுக்கு கூட நிலைக்கவில்லையாம்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.அதைத்தொடர்ந்து இவர் துபாய்க்கு டான்ஸ் நிகழ்ச்சிக்காக சென்றிருக்கும் போது அங்கு ரியாஸ் என்பவர் உடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் உங்களுடைய ஃபேன் என்று தான் ரியாஸ் ஷாலினி இடம் பழகினாராம். பிறகு இருவருக்கும் கருத்து ஒத்துப்போக இருவரும் தனியாக வாழ்ந்து இருக்கின்றனர். பிறகு காதலிக்கும் செய்தியையும் ஷாலினி வெளிப்படையாக அறிவித்திருந்திருக்கிறார்.
அப்போது ரியாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் மனைவியை விட்டு பிரிந்து இருக்கிறார் என்றும் ஷாலினியிடம் கூறியிருக்கிறார். பின்பு இருவரும் இந்து முறைப்படி முதலில் திருமணம் செய்து இருக்கின்றனர். பிறகு ஷாலினி ரியாஸ்காக அவருடைய முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி இருக்கிறார். அதற்கு பிறகு ஷாலினி கர்ப்பமாக இருந்திருக்கிறார். தொடர்ந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அந்த நிலையில் ரியாஸ் பலமுறை தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி இருக்கிறார்.
திருமணமான புதியதில் இருந்தே ரியாஸ் அடிக்கடி அடித்துக் கொடுமைப்படுத்தி பல நேரங்களில் தனியாக தெருவில் தவித்து வந்ததாகவும் ஆனால் குழந்தை பிறந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று இருந்த நேரத்தில் ரியாஸ் அப்போதும் குழந்தை பிறந்த பிறகும் திருந்தவில்லை என்றும் அதுபோல யாரிடமும் பேசக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்திருந்தாராம்.

எல்லாத்தையும் குழந்தைக்காக ஏற்றுக்கொண்டு இருந்தேன். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் அதே துன்புறுத்தல் எனக்கு நீடித்ததால் தான் நான் அதிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்தேன் என்று ஷாலினி கூறி இருக்கிறார்.ரியாசுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஷாலினி கூறியிருக்கிறார். இந்த நிலையில் இனி இவரோடு வாழ முடியாது என்று முடிவெடுத்து ஷாலினி ரியாசிடம் விவாகரத்தை கேட்டதற்கு ஆரம்பத்தில் ரியாஸ் விவாகரத்து கொடுக்காமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பிறகு நீண்ட நாட்கள் கழித்து ரியாஸ் இடம் இருந்து ஷாலினிக்கு விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதைத்தான் நான் போட்டோ சூட் எடுத்துக் கொண்டாடினேன் என்று கூறுகிறார்.அதுமட்டுமில்லாமல் நான் இப்படி செய்வதற்கு காரணம் என்னைப் போல பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தால் விவாகரத்து என்பது ஒரு பெரிய பிரச்சனை கஷ்டம் என்று நினைக்காமல் அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக தான் நான் இப்படி ஒரு போட்டோ சூட் எடுத்தேன்.
நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை. அதுபோல இப்போதைய சூழ்நிலையில் நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவும் விரும்பவில்லை என்று தன்னுடைய சமூக வலை பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார். இதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது மீம்ஸ்களில் ஷாலினியின் போட்டோ சூட் புகைப்படங்கள் ட்ரெண்ட்டாகி கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து இரு தரப்பு கருத்துக்களும் குவிந்து வருகிறது.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications