வானத்தை போல ஷாம்லி நடித்த அந்த சீன்.. கடைசியாக யூனிட் செய்த செயலை பாருங்க.. இதுதாங்க நல்ல மனசு!
சென்னை: வானத்தை போல சீரியலில் பட்டுனு வந்து சட்டுனு செத்து போன மீரா கேரக்டரில் நடிகை ஷாம்லி நடித்திருந்தார். இவர் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை தனது சேனலில் பதிவிட்டுள்ளார்.
வானத்தை போல எனும் சீரியல், சன்டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதில் நடிகர் ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது போல் அவருக்கு தங்கையாக நடித்து வந்த ஸ்வேதா கேல்கேவுக்கு பதிலாக நடிகை மான்யா ஆனந்த் நடித்து வருகிறார்.

கன்னடத்து பைங்கிளி! ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதை. இந்த சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக 3 ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை 800 எபிசோடுகள் ஓடியிருக்கிறது. இந்த சீரியலில் சின்ராசுவின் தங்கையின் கர்ப்பத்தை ராஜபாண்டியின் அத்தை கோமதி சதி செய்து கலைத்து விடுகிறார். இந்த தகவலை ராஜபாண்டியிடம் சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் துளசி அவதிப்படுகிறார். இதில் இந்த குழந்தை தாய்மாமன் சின்ராசுக்கு ஆகாது என்றும் ஒரு ஜோசியர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது அத்தை கோமதி எத்தனையோ முறை துளசியின் வயிற்றில் குழந்தை இல்லை என சொல்லியும் அதை ராஜபாண்டி நம்ப வில்லை. ஒரு கட்டத்தில் கோயிலுக்கு அழைத்துச் சென்று துளசியிடம் சத்தியம் செய்ய சொல்லி கேட்கும் போதுதான் குழந்தை கலைந்த விஷயத்தை துளசி கூறுகிறார். ஆனால் கோமதியோ துளசி தனது அண்ணனுக்காக சிசுவை கலைத்துவிட்டாள் என கதைகட்டுகிறார்.

இதை ராஜபாண்டியும் அவருடைய அப்பாவும் நம்புகிறார். தனது குழந்தையை அழித்துவிட்டு தனக்கு துரோகம் செய்த துளசி இனி வேண்டாம் என கூறி அவரை அடித்து அவருடைய அண்ணன் வீட்டிற்கே துரத்திவிடுகிறார் ராஜபாண்டி. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலை முடிக்க முடியாமல் ஜவ்வு போல் இழுத்து வருகிறார்கள்.
இதில் மீரா, கிருஷ்ணன் என்ற இரு கேரக்டர்களையும் அவருக்கு மாமியார், ஒரு குழந்தை என மொத்தம் 4 கேரக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கிருஷ்ணனாக பாண்டவர் இல்லத்தில் நடிக்கும் நரேஷ் ஈஸ்வரும் மீராவாக ரோஜா சீரியலில் அனு எனும் வில்லியாக நடித் ஷாம்லியும் நடித்தனர். இவர்களில் கிருஷ்ணன், பொன்னியின் தந்தை முத்தையாவின் தம்பி மகன். இவருக்கு நல்லூத்தூர் சொசைட்டியில் மேனேஜராக பணி மாறுதல் கிடைத்துள்ளதால் காரில் வருகிறார்கள்.
அப்போது நல்லாதூர் ஊரை பார்த்து பிரமிக்கும் ஷாம்லி , நான் செத்தாலும் நல்லாதூரில்தான் என்கிறார். அதற்கு கணவனும் மாமியாரும் அவரை திட்டுகிறார்கள். எந்த நேரத்தில் அவர் சொன்னாரோ துளசி பொன்னியுடன் போன் பேசிக் கொண்டே வரும் போது அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதுகிறது.

இதில் கிருஷ்ணனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் லேசான காயம். ஆனால் மீராவோ (ஷாம்லி) காதில் ரத்தத்துடன் சரிகிறார். உடனே ஊர்க்காரர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டு அவர் இறந்துவிடுவதாகவும் அவருக்கு கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளை நடத்துவதாகவும் காட்டப்படுகிறது.
நடிகை ஷாம்லிக்கு குழந்தை பிறந்து அதை பார்த்து கொள்வதற்காக 2 ஆண்டுகள் பிரேக் எடுத்தார். சரி இவர் இந்த சீரியலில் நடிக்கிறாரே என இவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் இறந்துவிடுவது போல் காட்டுகிறார்கள். இதனால் நீண்ட பிரேக்கிற்கு பிறகு முதன் முதலில் நடிக்கும் போது ஏன் இந்த இறப்பு சீனில் நடித்தீர்கள் என ரசிகர்கள் ஷாம்லியிடம் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் ஷாம்லி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை தனது சேனலில் வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு நெற்றியிலும் காதிலும் ரத்தம் வருவது போல் காட்ட ஒரு திரவம் வைக்கப்படுகிறது. பின்னர் அவரை போஸ்ட்மார்ட்டம் செய்தது போல் பேக் செய்யும் காட்சிகளை காட்டுகிறார். மேலும் கடைசியாக அவரது உடலுக்கு தீமூட்டும் காட்சிகளையும் காட்டுகிறார்.
இந்த சீன்கள் எல்லாம் முடிந்ததும் அவருக்கு சீரியல் யூனிட்டில் உள்ள ஒருவர் திருஷ்டி கழிக்கிறார். அதாவது இறந்த காட்சியில் நடித்ததால் அவருக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதால் தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி கழிக்கிறார்கள். மேலும் ஷாம்லி இந்த குறுகிய கேரக்டரில் ஏன் நடித்தோம் என்பதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார். குழந்தை தன்னை பிரிந்து இருப்பாரா என்று ட்ரையல் பார்ப்பதற்காகவே 2 நாட்கள் கால்ஷூட்டிற்கு ஒப்புக் கொண்டேன். இவ்வாறு ஷாம்லி தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications