மோகன்லாலை நம்பக்கூடாது.. விமானத்தில் நடந்த சம்பவம்! என்னை அடிக்க ஆள் செட் பண்ணி- சாந்தி வில்லியம்ஸ்
சென்னை: நடிகை சாந்தி வில்லியம்ஸ் மலையாள சினிமா உலகில் நடக்கும் அவலங்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டி குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது நடிகர் மோகன்லால் தனக்கு செய்த நம்பிக்கை துரோகம் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகை சாந்தி வில்லியம்ஸ் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் ஒளிபதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்து இருந்தார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த சாந்தி வில்லியம்ஸ் பிறகு
தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் மீண்டும் நடிக்க வந்திருந்தார். ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் பல திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தது மட்டுமில்லாமல் இயக்கி, ப்ரோடுயூசன் செய்திருக்கிறார்.

அதே நேரத்தில் இப்போது உள்ளது போலவே அப்போது கிரேன் வசதிகள் இல்லாததால் வில்லியம்ஸ் ஒரு திரைப்படத்தில் காட்சிகள் தத்துரூபமாக வரவேண்டும் என்றால் எவ்வளவு பெரிய மரத்தில் கூட ஏறி அங்கிருந்து கேமரா ஹேண்டில் செய்து விடுவார் என்று அவரை குறித்து சினிமா உலகில் பலரும் பாராட்டுவார்கள். இந்த நிலையில் தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு தான் ரொம்பவே கஷ்டப் பட்டதாக வில்லியம்ஸ் மனைவியான சாந்தி கண்ணீரோடு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதிலும் சமீபத்தில் மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து பல நடிகைகள் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள சினிமா சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் விலகி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மோகன்லால் தன்னுடைய வாழ்க்கையில் செய்த நம்பிக்கை துரோகத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் சாந்தி வில்லியம்ஸ் பேசுகையில் என்னுடைய கணவர் இயக்கி, ஒளிப்பதிவு செய்த பல திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் மோகன்லாலுக்கு எங்க வீட்டில் இருந்துதான் சாப்பாடு போகும்.
என்னுடைய கணவர் ஒளிப்பதிவு அல்லது ப்ரொடக்ஷன் செய்யும் படத்தில் நடிப்பவர்களுக்கு அதிகமாக எங்க வீட்டில் இருந்து சாப்பாடு போவது வழக்கம்தான். அதிலும் மோகன்லாலுக்கு அதிகமாகவே போகும் எப்போதும் எங்கள் வீட்டில் வந்து தான் சாப்பிடுவார். ஆனால் என்னுடைய கணவர் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டார் என்ற போது ஒரு சின்ன உதவி கூட மோகன்லால் செய்யவில்லை. அதைக்கூட நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Actress Roopa Sree: ஷகிலா சொன்னமாதிரி அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையா? "ஒன்இந்தியாவிற்கு" ரூபஸ்ரீ விளக்கம்
ஆனால் என்னுடைய கணவர் இறந்த பிறகு அது பற்றி மோகன்லால் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏதோ ஒரு ஆளிடம் ஒரு நாள் நாம பேசினால் கூட அந்த ஆள் இந்த உலகத்தில் இல்லை என்றால் நமக்கு ஒரு வருத்தம் வரும். ஆனால் மோகன்லால் என்னுடைய வீட்டில் பல நாட்கள் சாப்பிட்டு இருக்கிறார். நானே அவருக்காக கர்ப்பமாக இருக்கும் போது கூட கஷ்டப்பட்டு நடந்து சென்று பணம் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய கணவர் இறப்பு பற்றி அவர் விசாரிக்கவில்லை.
நேரில் தான் வந்து பார்க்கவில்லை என்றாலும் ஒரு முறை நான் ஏர்போர்ட்டில் இருந்தேன் அப்போது விமானத்தில் மோகன்லால் இருந்தார். அதே விமானத்தில் நானும் இருந்தேன். ஆனால் அப்போது கூட மோகன்லால் என்னிடம் பேசவே இல்லை. என்னை பார்த்ததும் பார்க்காதது போல ஒளிந்து ஓடி விட்டார். நான் இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தேன். அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது பற்றி என்னுடைய நண்பர்கள் பலரும் நீங்கள் கேரளாவிற்கு சென்று விடாதீர்கள் உங்களை அடிக்க ஆள் வைத்து இருப்பார்கள் என்று மிரட்டுகிறார்கள்.
ஆனால் நான் அதற்கெல்லாம் பயப்படவே இல்லை. ஒருத்தங்க செஞ்ச உதவியை ஒரு செகண்ட் கூட நினைத்துப் பார்க்காத மனுஷங்கள் இருக்கிறார்கள் என்றால் அது மோகன்லால் ஆகத்தான் இருக்கும். அவங்களே நன்றாக பயப்படாமல் இருக்கும்போது நாம ஏன் பயப்படனும்? எனக்கு என்னுடைய கணவர் பெயர் வில்லியம்ஸ் என்னுடைய பெயருக்கு பின்னாடி இருக்கிற வரைக்கும் நான் எந்த இடத்திலும் பயப்பட மாட்டேன் என்று அந்த பேட்டியில் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications