Actress Roopa Sree: ஷகிலா சொன்னமாதிரி அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையா? "ஒன்இந்தியாவிற்கு" ரூபஸ்ரீ விளக்கம்
சென்னை: நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் (Shakeela interview) சீரியல் நடிகை ரூபஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் போது அவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை, என் கண் முன்பே நடந்தது என்று பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இந்த நிலையில் ஷகிலா சொன்னது உண்மையா? இல்லையா? என்று நடிகை ரூபஸ்ரீ ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
கடந்த வாரத்தில் மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. இது மலையாள சினிமாவை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதனுடைய தாக்கம் தமிழிலும் இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் இதே அட்ஜஸ்ட்மெண்ட்பிரச்சனை இருக்கிறது என்று சில நடிகைகள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் சீரியல் நடிகை ரூபஸ்ரீக்கு மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் கண் முன்னே பிரச்சனை ஏற்பட்டது என்று பேசி இருக்கிறார். சீரியல் நடிகை ரூபஸ்ரீ வேறு யாரும் இல்லை, தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒளிபரப்பான "பாரதிகண்ணம்மா" சீரியலில் பாரதியின் அம்மாவாக நடித்த நடிகை தான்.
அவர் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "ரஞ்சிதமே" சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஷகிலா பேசுகையில், மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் ரூபஸ்ரீ கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தாங்க. அந்த படத்தில் நான் ஒரு சின்ன கேரக்டர் பண்ணி இருந்தேன். அப்போது ஒரு நாள் இரவு ரூபஸ்ரீ ஒரு ரூமில் தனியாக தங்கி இருந்தார். அதற்கு எதிர்த்த ரூமில் நானும் என்னுடைய தம்பியும் தங்கி இருந்தோம்.

அப்போது இரவு நேரத்தில் நான்கு பேர் குடித்துவிட்டு வந்து ரூபஸ்ரீயின் ரூம் கதவை தட்டினார்கள். அந்த பொண்ணு பயந்து போய் கதவை திறக்க மாட்டேன் என்று கத்திக் கொண்டிருந்தாங்க. நாங்க போய் தான் அந்த நபர்களை விரட்டப் பார்த்தோம் அவர்கள் எங்களை அடித்தார்கள் நாங்களும் அவர்களை அடித்து துரத்தி அந்த பெண்ணை வேறு ஒரு டாக்ஸி புக் பண்ணி அனுப்பி வைத்தோம். இந்த மாதிரி அட்ஜஸ்மென்ட் பிரச்சனை வெளிப்படையாகவே நடக்கிறது என்று பேசி இருந்தார்.
இது பற்றி நாம் நடிகை ரூபஸ்ரீயிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், அவர் ஷகிலா சொல்வதில் சில விஷயங்கள் உண்மை இருக்கிறது. ஆனால் எல்லா விஷயங்களும் உண்மை இல்லை. நான் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தேன். அந்த திரைப்படத்தில் நடிகை ஷகிலாவும் ஒரு ரோல் பண்ணுனாங்க. எப்போதும் சூட்டிங்கிற்க்கு எங்க அப்பா என்னுடைய துணையாக வருவாங்க.

ஆனால் அன்று அப்பா வரவில்லை நான் தனியாக இருந்தேன். ஆனால் மேக்கப் மேன், அசிஸ்டன்ட் எல்லோரும் இருந்தார்கள். நான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்ததும் அடுத்த நாள் நான் இன்னொரு சூட்டிங் போக வேண்டும் என்று பட குழுவினரிடம் முதலில் சொல்லியிருந்தேன். அதற்கு வண்டி புக் பண்ணி தருமாறு அவர்களிடம் கேட்டிருந்தேன். முதலில் சரி என்று சொன்னவர்கள் பிறகு ரூமிற்கு வந்து முடியாது என்று பிரச்சனை செய்தார்கள்.
அப்போது ஷகிலாவும் அவருடைய தம்பியும் தான் வந்து பிரச்சனை செய்தவர்களிடம் பேசினார்கள். ஷகிலா சொன்னது போல அவர்கள் குடித்து இருந்தார்கள் அது உண்மைதான். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு ஷகிலா எனக்கு டாக்ஸி புக் பண்ணி வேற சூட்டிங் அனுப்பி வைத்தார்கள். நான் அடுத்த நாள் இன்னொரு படத்தில் நடித்துவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் மீண்டும் அந்த பட சூட்டிங்கிற்க்கு வந்தேன்.

ஷகிலா சொன்னது போல அது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைக்காக நடக்கவில்லை. பார்க்கிறவர்களுக்கு எப்படி வேணும் என்றாலும் தோன்றி இருக்கலாம். நான் சினிமாவில் இப்போ வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் என்னிடம் யாரும் வெளிப்படையாக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியது கிடையாது என்று ரூபஸ்ரீ கூறி இருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications