எஸ்வி சேகர் சூட்டிங் ஸ்பாட்டில் சொன்ன அந்த வார்த்தை.. அதிர்ச்சியாக இருந்தது.. நடிகை ஷோபனா ஓபன்
சென்னை: கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியலில் நடிகர் எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் எஸ் வி சேகர் தன்னிடம் சூட்டில் ஸ்பாட்டில் வைத்து சொன்ன பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் எஸ்.வி. சேகர் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். சோசியல் மீடியாவில் அவர் சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் பற்றி போட்ட போஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல அரசியல் பிரமுகர்கள் பலரைப் பற்றியும் அவர் விமர்சித்து பேசுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ப்ரோமோ வீடியோ
இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் சீரியல் நடிகை ஒருவரோடு திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியலின் ப்ரோமோஷன் புகைப்படங்கள் தான் என்பது பிறகு தான் தெரிய வந்தது. அதில் 75 வயதான கேரக்டரில் எஸ்வி சேகர் நடிக்கும் போது அவருக்கு இளம்பெண்ணோடு திருமணம் நடப்பது போன்று காட்சிகள் இருந்தது.
வித்தியாசமான கதை
இந்த கதை புதுமையாக இருந்தாலும் இது சமுதாயத்தில் சீர்கேட்டை உருவாக்கும் என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஷோபனா இது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். ஷோபனா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் கதாநாயகியாக நடித்தவர்தான்.

புது சீரியல்
அந்த சீரியலுக்குப் பிறகு இப்போது மீனாட்சி சுந்தரம் என்ற சீரியலிலும், விஜய் டிவியில் பூங்காற்று திரும்புமா என்ற சீரியலிலும் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு சீரியலுக்கும் ஒரே நாளில் தான் ப்ரோமோ வெளியானது. அதிலும் இரண்டு சீரியலிலும் வித்தியாசமான கேரக்டரில் இவர் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் எஸ்வி சேகர் பற்றி பேசுகையில் ஆரம்பத்தில் என்னிடம் மீனாட்சி சுந்தரம் சீரியலுக்கான கதையை சொல்லும்போது எனக்கு ஓகே என்று தோன்றியது.
வேற மாதிரி கேரக்டர்
அப்போது என்னிடம் நீங்கள் ஆட்டோ ஓட்டும் பெண் என்று சொன்னார்கள். அதுவும் அடாவடியான கேரக்டரில் நடிக்க போறீங்க என்று சொன்னார்கள். அது எனக்கு பிடித்திருந்தது. அதற்கு பிறகு வயதான நபருடன் உங்களுக்கு கல்யாணம் என்றெல்லாம் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அப்போது இது கான்ட்ரோவெர்சியாக மாறும் என்று தோன்றியது.
நடிகர் எஸ்வி சேகர் ஜோடி
கடைசியில் தான் உங்களுக்கு ஜோடி நடிகர் எஸ்வி சேகர் என்று சொன்னார்கள் எனக்கு எஸ்வி சேகர் என்றதும் டக்கென்று நினைவிற்கு வரவில்லை. நீங்கள் போட்டோ காட்டுங்க நான் யாரு என்று பார்க்கிறேன் என்று அப்போது சொன்னேன். பிறகு போட்டோ காட்டியதும் இவரை நான் படத்தில் பாத்திருக்கிறேனே என்று சொல்லி சில படங்களின் பெயரை சொன்னேன். ஆனாலும் எனக்கு அவருடன் நடிக்கிறேன் என்பது அதிர்ச்சியாக தான் இருந்தது.

அம்மாவுக்கு சந்தோஷம்
பிறகு வீட்டில் வந்து அம்மாவிடம் நான் எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடிக்க போறேன் என்று சொன்னேன். என்னுடைய அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. காரணம் என்னுடைய பாட்டிக்கு எஸ்வி சேகரை ரொம்பவும் பிடிக்குமாம். பாட்டி தான் என்னை வளர்த்தாங்க. இப்போ பாட்டி இல்லை, நீ எஸ்வி சேகர் உடன் நடிப்பதை பாட்டி பார்த்துட்டே இருப்பாங்க என்று சொன்னாங்க அது எனக்கு ஓகே என்பது போல இருந்தது.
பாட்டிக்கு பிடித்த நடிகர்
பிறகு சூட்டிங் ஸ்பாட்டில் நான் சாரிடம் பேசும்போது பல விஷயங்கள் சொல்லியிருக்கிறேன் நீங்க இந்த படத்தில் நடிச்சு இருக்கீங்க நான் பார்த்தேன் என்று சொல்லும்போது அவர் அந்த படத்தில் என்ன சம்பவம் எல்லாம் நடந்ததோ அதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாரு. அதுபோல ஒரு முறை அவர் பெரிய நடிகர் என்பதால் எனக்கு அவரிடம் இயல்பாக பேசுவதற்கு வராது, கொஞ்சம் தயக்கம் இருக்கும்.
வியப்பு
ஆனால் எஸ்வி சேகர் என்னிடம் நீங்க முத்தழகு சீரியலில் நடிச்சிருக்கீங்க உங்களுடைய சீரியலை எங்க வீட்டில் பாப்பாங்க என்னுடைய மனைவிக்கு உங்க சீரியல் பிடிக்கும் என்று சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இவங்க எல்லாம் என்னுடைய சீரியல் பார்த்து இருக்காங்களா என்று எனக்கு வியப்பா இருந்தது.
உங்க கருத்து என்ன
இந்த சீரியலுக்கான சூட்டிங் இப்போது போய்க்கொண்டிருக்கிறது விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்று ஷோபனா பேசியிருக்கிறார். ஷோபனா முத்தழகு சீரியலில் நடித்ததை பார்த்திருக்கிறீர்களா? அவர் இப்போது மீனாட்சி சுந்தரம் சீரியலில் 75 வயதான நடிகர் எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடிக்கும் கேரக்டர் சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை இது தவறான முன் உதாரணம் என்று நினைக்கிறீர்களா? பாஸ்.!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications