கல்யாணத்துக்கு முன்னாடி கொடைக்கானலில் பீரியட்ஸ் வலி.. சித்து செய்த செயல்! ஸ்ரேயா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து தம்பதி தனியார் சேனலில் தங்களுடைய காதல் கதை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கின்றனர். அதில் ஸ்ரேயா தங்களுடைய திருமணத்திற்கு முன்பு கொடைக்கானலுக்கு சூட்டிங் போயிருக்கும் போது எதிர்பாராத விதமாக தனக்கு பீரியட்ஸ் வந்துவிட்ட நேரத்தில் தான் பட்ட வலி வேதனை குறித்து பேசி இருக்கிறார்.

அதுபோல பீரியட்ஸில் தான் கஷ்டப்பட்டபோது தனக்கு துணையாக இருந்த சித்து பல எதிர்பார்க்காத உதவிகளை செய்திருந்தார். அதற்கு பிறகு தான் எனக்கு அவரை அதிகமாக பிடிக்க தொடங்கியது என்று ஸ்ரேயா பேசியிருக்கிறார். அதுபோல திருமணத்திற்கு பிறகு தங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் அதில் பேசியிருக்கிறார்.

Actress Shreya Anchan about the pain when she unexpectedly got her periods

அந்த வகையில் கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியல் மூலமாக பல இளம் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து ஜோடிக்கு அதிகமான ஃபேன்ஸ் பேஜ் இணையத்தில் இருக்கிறது. இந்த ஜோடி இருவரும் ரீல் லைப்பிலும் மக்களின் மனதை கவர்ந்திருந்தனர். அது போல முதல் சீரியலிலேயே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு பிறகு திருமணமும் செய்து இருந்தனர்.

திருமணத்திற்கு பிறகு சித்து ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பெரிய அளவில் எந்த பெரிய சீரியலிலும் நடிக்கவில்லை. இப்படியான நிலையில் சமீபத்தில் இவர்கள் தனியார் சேனல் ஒன்றில் தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்கள்.

Actress Shreya Anchan about the pain when she unexpectedly got her periods

அதில் ஸ்ரேயா பேசுகையில் நான் சீரியலில் சித்துவோடு நடிக்கும் போது எனக்கு ஆரம்பத்தில் இவரோடு சண்டைதான் வந்திருக்கிறது. பிறகு எனக்கு தமிழ் தெரியாததால் தமிழ் சொல்லிக் கொடுத்தது சித்து தான். அதற்குப் பிறகு ஒருநாள் நடந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அதாவது அந்த நேரத்தில் நாங்கள் ஒரு சூட்டிங்காக கொடைக்கானலுக்கு போய் இருந்தோம்.

அங்கு எதிர்பார்க்காத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. அந்த நேரத்தில் நான் பேட் எதுவும் எடுத்துட்டு போக மறந்து விட்டேன். நாங்கள் சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டும். அதனால் நான் என்ன செய்வது என்று தத்தளித்து தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் சில உதவிகளை செய்தார்.

அதற்கு பிறகு தான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கை வந்தது, அவரை பிடிக்கவும் தொடங்கியது... என்று கூறியிருக்கிறார். அதோடு திருமணத்திற்கு பிறகு ஒரு சிலர் குழந்தை எப்போது என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எங்களிடம் அதைக் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நாங்கள் இருவரும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறோம், அதனால் நாங்கள் குழந்தை எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எடுக்கிற முடிவே போதும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சமூக வலைத்தளத்தில் ஒரு பெண்மணி எனக்கு அடிக்கடி சூர்யா, ஜோதிகா குழந்தைகளோடு இருக்கும் புகைப்படம் அதுபோல ரன்பீர் கபூர் தங்களுடைய குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை அனுப்பி எப்படி இருந்தாலும் ஆசைகள் இருக்க தானே செய்யும் என்று என்னிடம் கேள்வி கேட்பார். அதைப் பார்த்து ஏன் இவங்க இப்படி பண்றாங்க என்று எங்களுக்கு தோணும். அது போல சமீபத்தில் நான் ஒரு விளம்பரத்தில் கர்ப்பமாக இருப்பது போன்று நடித்து இருந்தேன். இதை அடுத்து எல்லோரும் எங்களிடம் குழந்தை எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றுக்கும் நேரம் என்று ஒன்று வரும் என்று அதில் ஸ்ரேயா அஞ்சன் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+