Shruthi: ஆபாச வீடியோ சர்ச்சை.. அந்த நேரத்தில் நடந்த சம்பவம்! இப்போ பாசிட்டிவ்! நடிகை ஸ்ருதி நாராயணன் ஓபன்
சென்னை: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் 'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ சர்ச்சை காரணமாக அதிகமாக பேசப்பட்டார். அந்த நெகட்டிவ் சூழலை தனக்கு சாதகமான சக்தியாக மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக அவர் அளித்த பேட்டிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சர்ச்சையின் தொடக்கம்
ஸ்ருதி நாராயணன் விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து பிரபலம் ஆன சமயத்தில், அவர் தொடர்பான ஒரு ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோ உண்மையானதா, பேக் வீடியோவா அல்லது படவாய்ப்பிற்காக மிரட்டி எடுக்கப்பட்ட போலி ஆடிஷன் வீடியோவா என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன.
அதுவரைக்கும் ஸ்ருதி நாராயணன் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்தவர்கள் கூட அந்த வீடியோவை பார்த்ததும் இவர் யார் என்று இவரை பற்றி தேட தொடங்கிவிட்டனர். அப்போது ஸ்ருதி தனது சோசியல் மீடியாவை யாரும் பார்க்க முடியாதபடி பிரைவேட்டாக வைத்திருந்தார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் அதை அனைவரும் பார்க்கும்விதமாக பப்ளிக் மோடுக்கு மாற்றி, அதிர்ந்துப் போன விமர்சகர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் துணிச்சலுடன் தனது புகைப்படங்களை பகிர்ந்து தனது மன உறுதியை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னை பற்றி பரவிய எதிர்மறை சூழல் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், ஸ்ருதி தன்னம்பிக்கை நிறைந்த கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்: "இந்தச் சர்ச்சை என் வாழ்க்கையின் ஒரு கசப்பான அத்தியாயம் தான். ஆனால், இது என்னைத் தனிப்பட்ட முறையில் மிகவும் வலுவானவளாக மாற்றியது.
என்னை சுற்றியுள்ளவர்கள், குறிப்பாக என் குடும்பத்தினர் மற்றும் உண்மையான ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவு அளப்பரியது" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார். "இந்த எதிர்மறை விமர்சனங்கள் தான் என்னை இன்னும் அதிகமாக உழைக்கத் தூண்டின. இப்போது என் கவனம் முழுவதுமே எனது நடிப்பிலும், ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கைக் கொடுப்பதிலும் தான் உள்ளது. நான் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து, என் திறமையால் நிரூபிப்பேன்" என்று தெளிவாகத் தெரிவித்தார்.
இந்த சவாலுக்கு பிறகு கிடைத்த பிரபலம் பிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கு, "எனக்குத் தெரியவில்லை" என்று பதிலளித்தாலும், தற்போது அந்த எதிர்மறை சூழலில் இருந்து வெளியேறி வாழ்க்கையை தொடர்ந்து வருவதாக கூறினார்.
புதிய சினிமா வாய்ப்பு
இந்த சர்ச்சை சம்பவத்தால் கிடைத்த அடையாளம் அவருக்கு எதிர்பாராத திருப்புமுனையைக் கொடுத்துள்ளது. சமீபத்தில், ஸ்ருதி நாராயணன் 'கட்ஸ்' என்ற புதிய திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
சினிமா துறையில் சவால்கள் மற்றும் சர்ச்சைகள் வருவது வழக்கம் என்றாலும், ஒரு எதிர்மறை சூழலை தனது திறமையை நிரூபிக்கப் பயன்படுத்தி, சின்னத்திரையில் இருந்து சினிமா உலகிற்கு பாய்ச்சலை எடுத்திருப்பது பாராட்டிற்குரியது. அவரது இந்தத் தன்னம்பிக்கை பயணம் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications