தவறான பார்வை.. சில்க் ஸ்மிதாவுக்கு ரேட் பேசிய நபர்.. அப்படிப்பட்டவர் கிடையாது: பதிலடி தந்த வி. சேகர்
சென்னை: டைரக்டரும், நடிகருமான வினு சக்கரவர்த்தி மூலம் திரையுலகில் 1979ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் மூலம் அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா.. வினுசக்ரவர்த்திக்கு இந்தி நடிகை சுமிதா என்பவரை மிகவும் என்பதால் சுமிதா என்றும்,படத்தின் கேரக்டர் 'சில்க்’ என்பதையும் சேர்த்து 'சில்க் ஸ்மிதா’ என்று பெயர் மாற்றினார். நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு ஒருமுறை ஷூட்டிங்கில் நடந்த மோசமான அனுபவம் குறித்து இயக்குனர் வி.சேகர் தந்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் Reflect Lifestyle என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தந்திருந்த பேட்டியில் சில்க் பற்றி பேசியிருந்தார்..
"சினிமாவில் நுழைந்தால் சாவித்திரி போல வரணும் என்று சின்ன வயதிலேயே நினைத்து கொள்வாராம் சில்க்..சில்க்கின் அம்மா , அப்பா கூலிவேலை செய்பவர்கள்... சில்க்கு 16 வயதில், பக்கத்து கிராமத்தில் ஒருவருக்கு திருமணம் செய்து தந்தனர்.. ஆனால் புகுந்த வீட்டிலும் வறுமை.. கணவரும் மொடா குடிகாரர்.. பல துன்பங்களுக்கு அங்கிருந்து தப்பி, தன் அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார் சில்க்.

குரு காரு வணக்கம்
இதற்கு பிறகுதான் பக்கத்து வீட்டு பெண்மணியின் அறிவுரை பேரில், அவருடன் சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி தோல்வி அடைந்தார்.. அப்போது, அபர்ணா என்ற நடிகைக்கு, வீட்டு வேலைக்கும், டச்சப் பெண்மணிக்கும் ஆள் தேவைப்படுவதாக சொல்லவும், அங்கு வேலைக்கு சென்றிருக்கிறார் சில்க்.
ஒருநாள் மிளகாய் அரைக்க மிஷினுக்கு சென்றபோதுதான், நடிகர் வினுசக்ரவர்த்தி, கண்ணில் பட்டு, நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. அப்போதுமுதல் அப்போது முதல் வினுசக்கரவர்த்தியை "குரு காரு" என்றுதான் சொல்வாராம் சில்க்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
சில்க் ஸ்மிதா
இந்நிலையில், பிரபல டைரக்டர் வி.சேகர், சமீபத்தில் rednool என்ற ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து கூறியிருக்கிறார்."நீங்களும் ஹீரோதான் என்ற படத்தை எடுத்து கொண்டிருந்தேன்.. அந்த படத்தில் சில்க் கமிட்டாகியிருந்தார்... இந்த படத்தின் ஷூட்டிங், ஒரு கிராமத்தில் நடைபெற்றது. எனவே, சில்க்கை அங்கிருந்த ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தேன்.
சில்க் ரேட் என்ன
மறுநாள் அந்த ஊரிலுள்ள பண்ணையார்கள் எல்லாம், டைரக்டர் சார் யார்? என்று விசாரித்து என்னிடம் வந்து, "எவ்ளோ ரேட் ஆகும்? என்று கேட்டார்கள்.வந்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்பதாலும், ஊரிலுள்ள பிரபலங்கள் என்பதாலும், படம் தயாரிப்பதற்குதான் ரேட் கேட்கிறார்கள் என்ற நினைத்துக் கொண்டு, நானும் அதுசம்பந்தமாக பேசினேன்..
ஆனால் அந்த பெரிய மனிதர்களோ, அதில்லை சார், சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு நாளைக்கு என்ன ரேட்? என்று கேட்டார்கள்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான், சில்க் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தேன் என தெரிவித்துள்ளார் டைரக்டர் வி.சேகர்.
கார்கேர்ள் கிடையாது
அதேபோல, ஏற்கனவே மற்றொரு யூடியூப் சேனலுக்கு வி சேகர் பேட்டியிலும் சில்க் பற்றி சொல்லியிருந்தார். "நீங்களும் ஹீரோதான் என்று படம் எடுக்க போகிறேன்.. அதில் நீங்கள் கிளாமர் ஹீரோயினாக இருந்தாலும், அந்த ஊரிலுள்ள காதல் ஜோடியை சேர்த்து வைக்கிற நல்ல கேரக்டர்..
கிளாமர் ரோல் நடிப்பதால், தவறான பெண் கிடையாது, எல்லாருக்குமுள்ள சுயமரியாதை நிறைந்த பெண், சினிமா வேறு, பர்சனல் வாழ்க்கை வேறு என்பதைதான் இந்த படத்தில் சொல்கிறேன்.. இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடிக்கலாம் என்றேன்.
இதைக்கேட்டு சில்க் ஆச்சரியப்பட்டு, உண்மைதான் சார், "எப்படியிருக்கே சில்க்? நான் யார் தெரியுமா? என்று எனக்கு போனை போட்டு அழைக்கிறார்கள்.. கிளாமர் கேரக்டரில் நடிப்பதாலேயே என்னை கால்கேர்ள் என்று நினைத்து கொள்கிறார்கள் என்று வருத்தப்பட்டு சொன்னார். பிறகு அந்த கேரக்டரை வெகு சிறப்பாக நடித்திருந்தார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications