ஒரே நடிகையை லவ் பண்ண 2 ஹீரோ? பஞ்சமில்லாத கிசுகிசு.. உச்ச ஹீரோயினா வர காரணமே இந்த திறமைதான்: பிரபலம்
சென்னை: "மும்பையில் சொத்துக்கள் உள்ளது என்றாலும், சென்னையிலும் சிம்ரனுக்கு வீடு உள்ளது.. தமிழ் இப்போது நன்றாக கற்றுக் கொண்டார்.. காஜல் போன்றோர் ஃபீல்டு அவுட் ஆக காரணமே தமிழ் கற்றுக் கொள்ளாததுதான். சிம்ரன் சின்சியரான நடிகை என்பதால்தான், நீண்ட காலம் சினிமாவில் அவரால் நீடிக்க முடிந்தது " என்று பிரபல நடிகை சிம்ரனுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "இடுப்பழகி என்று பெயர் பெற்ற நடிகை சிம்ரன் படு பிஸியாக இருந்தவர்.. எந்நேரமும் ஷூட்டிங் ஷூட்டிங் என்றே ஓடிக்கொண்டிருந்தார்.. அப்போது உச்சத்தில் இருந்ததால், தங்கை மோனலை கூட அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.. ஒரு அக்காவாக இருந்து மோனலை கை தூக்கி விட்டிருக்கலாம்.. அந்த காலத்தில் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர் நடிகை சிம்ரன்.

பஞ்சமில்லாத கிசுகிசு
பொதுவாக, ஒரே நடிகருடன் சேர்ந்து 2 படங்கள் நடித்தாலே கிசுகிசுக்கள் வந்துவிடுவது இயல்பாகும்.. கிசுகிசு வருகிறது என்றாலே, சம்பந்தப்பட்ட நடிகை, அடுத்தக்கட்டத்துக்கு உயர்கிறார் என்று அர்த்தம்.,. "கிசுகிசு என்பது எனக்கு பப்ளிசிட்டி, அதெல்லாம் பெரிசாக எடுத்து கொள்ளக்கூடாது" என்பார் திரிஷா. அதுபோல, பிஸியாகவே இருந்ததால், சிம்ரனுக்கும் நிறைய கிசுகிசுக்கள் அப்போது வந்தது.
குறிப்பாக, ராஜூ மாஸ்டருடன் காதல் என்று செய்திகள் கசிந்தன.. அப்போது அவருடன் சேர்ந்து பல படங்களில் பணியாற்றினார் சிம்ரன்.. சிம்ரனின் பல படங்களுக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைத்து தந்துள்ளார்.. பிறகு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை எடுத்து, அதில், ஹீரோவாக ராஜூ சுந்தரம் நடித்தார்.. ஹீரோயினாக சிம்ரன் நடித்தார்.. இவர்கள் இருவருமே காதலித்ததாக செய்திகள் பரபரத்தன.
கமலுடன் வந்த கிசுகிசுக்கள்
பிறகு, கமலுடன் பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் படங்களில் சிம்ரன் இணைந்து நடித்தார்.. அப்போது கமலுடன் காதல் என்று மீண்டும் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், கமல்தான் தன்னை காதலித்ததாகவும், தான் காதலிக்கவில்லை என்றும் சிம்ரன் சொல்லியிருந்தார்..
அதேபோல, ஒரு ஷூட்டிங்கில் கமல் வந்து சிம்ரனுக்காக காத்திருந்ததாகவும், ஆனால் சிம்ரன் அவரை கண்டுகொள்ளவில்லை என்றும், கமலை சிம்ரன் சந்திக்க மறுத்து கிளம்பி போக சொன்னதாகவும்கூட, அந்த காலத்தில் பேச்சுக்கள் உண்டு..
ஒரு பத்திரிகையாளரிடம் ஸ்ரீவித்யா கேட்டாராம், கமல் சாரும், சிம்ரனும் கல்யாணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வருகிறதே? அப்படியெல்லாம் இருக்காது, கமல் சார் அப்படியெல்லாம் திருமணம் செய்ய மாட்டார்" என்றாராம்.
எனினும், இந்த காதல்கள் எல்லாம் உண்மையா என்று தெரியாது.. பப்ளிசிட்டிக்காகவும் காதல் என்ற பேச்சு அவர்களே கிளம்பியிருக்கலாம். அல்லது காதலித்தது போல நடித்திருக்கலாம். ஆனால், பரபரப்புகள் அதிகமாகவே அந்த காலத்தில் இருந்தன.
அழகான குடும்பம், அன்பான கணவன்
ஒருகட்டத்தில் சினிமாவில் தனக்கு தொய்வு ஏற்பட்டபோது, தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டார் சிம்ரன்.. நல்ல புரிதலுடன் குடும்ப வாழ்க்கை துவக்கினார்.. 2 குழந்தைகளும் பிறந்தன. குழந்தைகளுக்காக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.. ஆனால் வாய்ப்புகள் அவருக்கு எப்போதுமே வந்து கொண்டு இருந்தாலும், பிள்ளைகளுக்காக அந்த படங்களை தவிர்த்தார். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார்.
மும்பையில் சொத்துக்கள் உள்ளது என்றாலும், சென்னையிலும் சிம்ரனுக்கு வீடு உள்ளது.. தமிழ் இப்போது நன்றாக கற்றுக் கொண்டார்.. காஜல் போன்றோர் ஃபீல்டு அவுட் ஆக காரணமே தமிழ் கற்றுக் கொள்ளாததுதான். சிம்ரன் சின்சியரான நடிகை என்பதால்தான், நீண்ட காலம் சினிமாவில் அவரால் நீடிக்க முடிந்தது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்..
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications