அஜித்தின் பத்மபூஷனுக்கு வாழ்த்துக்கள்.. விஜய் பற்றிய கேள்விக்கு நாசூக்காக பதில் சொன்ன சிம்ரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித், விஜய் உடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்த நடிகை சிம்ரனிடம் செய்தியாளர்கள் அஜித் பத்மபூஷன் விருது பெற்றதை பற்றியும், விஜய் அரசியல் பயணம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அப்போது அதற்கு ஒரே வார்த்தையில் சிம்ரன் பதில் கொடுத்திருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கி பலருடைய கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன் இப்போது மீண்டும் கம்பேக் கொடுத்து கலக்கி கொண்டு இருக்கிறார். 90s களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரன் விஜய், அஜித், கமல்ஹாசன், சரத்குமார் என்று பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி சிம்ரனை பற்றி மீண்டும் பேச வைத்திருக்கிறது.

Simran Ajith Vijay

சிம்ரனின் வெற்றி படங்கள்

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மட்டுமல்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிம்ரன் வந்திருந்தாலும் அந்த திரைப்படத்தில் அதிகமாக கைதட்டுகள் வாங்கியது சிம்ரன் தான். சென்னை விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார்.

சிம்ரன் கம்பேக்

அப்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வெற்றி எப்படி பாக்கறீங்க என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த வெற்றி எனக்கு ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். ஒரு ஃபேமிலி திரைப்படம் வெற்றி அடைந்திருக்கு. குட் பேக் அக்லி கூட திரும்ப பிரியாவை உருவாக்கி இருக்கு. அதனால் எனது ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய முப்பதாவது ஆண்டில் இதுதான் சிறந்த தருணம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

விஜய்க்கு வாழ்த்து

அதைத்தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிப்பீர்களா? என்று கேட்டபோது, 100% பெண்களை மையப்படுத்திய படங்களில் நடிப்பேன். இப்போது ஆடியன்ஸ் எல்லாம் ஓபன் மைண்ட் உடன் இருக்கிறார்கள். பெண்கள் தொடர்பான பெண்களை மையப்படுத்தும் படங்களை செய்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். எந்த படமாக இருந்தாலும் அதில் கதை தான் பாஸ் என்று சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்த சிம்ரனிடம் உங்களுடன் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள், அதில் நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி எப்படி பார்க்கிறீங்க என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் விஜய்க்கு ஆல் த பெஸ்ட் சொல்கிறேன், குட் லக் என்று ஒரே வார்த்தையில் முடித்திருக்கிறார்.

Simran Ajith Vijay

விஜய் அரசியல் பற்றி பதில்

அதைத் தொடர்ந்து நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அதில் விஜயகாந்த் வந்து எதிர்க்கட்சி தலைவர் வரைக்கும் வந்தாங்க, நடிகர் விஜய் அரசியலில் தாக்குபிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "இந்த கேள்வியை இப்போதைக்கு தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். கரெக்டான டைம் வரும்" என்று நாசூக்காக சிம்ரன் பதில் கொடுத்து இருக்கிறார்.

அஜித் பற்றி சிம்ரன்

அதைத்தொடர்ந்து அஜித் பத்மபூஷன் விருது வாங்கி இருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்று கேட்கப்பட்டபோது, "அஜித் பத்ம பூஷன் விருது பெற்றதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அஜித் அதற்கு தகுதியானவர் என்று சிம்ரன் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+