மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நிறைவேற்றிய சிம்ரன்.. ஒரு கையோடு பிறந்தாலும்.. மனசு முழுக்க தன்னம்பிக்கை
சென்னை: நடிகை சிம்ரன் செய்த ஒரு செயல் சோசியல் மீடியாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு கையுடன் பிறந்த 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி நிஷாவை நேரில் சந்தித்த சிம்ரன் அவருடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரலாகி பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நிஷா பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்தவர். ஆனால் அந்த குறையை அவர் ஒருபோதும் தனது பலவீனமாக நினைக்கவில்லை. டான்ஸ் மீது அளவில்லாத ஆர்வம் கொண்ட நிஷா வீட்டிலேயே பயிற்சி செய்து பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அவரது தன்னம்பிக்கையும் திறமையும் பலரது கவனத்தை ஈர்த்தது.
சிறுமிக்கு உதவிய சிம்ரன்
நிஷாவின் திறமையை உலகம் அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆர்வலர் ஆஷிக், நிஷாவின் வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு பிறகு அந்த தகவல் நடிகை சிம்ரனின் கவனத்திற்கு சென்றது. நடிகை சிம்ரனின் தீவிர ரசிகையான நிஷாவுக்கு ஒரு நாள் அவரை நேரில் சந்தித்து அவருடன் டான்ஸ் ஆட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசையாக இருந்ததாம் அதை தெரிந்து கொண்டு சிம்ரன் நிஷாவை தன்னுடைய வீட்டிற்க்கே நேரில் அழைத்து இருக்கிறார்.

நடிகை சிம்ரனின் மனித நேயம்
நிஷாவுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் சிம்ரனை பார்ப்பதற்கு ரொம்பவும் சந்தோஷமாக அந்த வீட்டிற்கு போய் இருக்கிறார். அங்கு அவரை நேரில் பார்த்ததும் அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாம். பிறகு வீட்டில் இருந்த புகைப்படங்கள் மற்றும் எல்லா இடங்களையும் சுற்றி பார்த்து இருக்கிறார். அப்போது விஜய்யுடன் சிம்ரன் எடுத்த புகைப்படத்தை பார்த்தது இது விஜய் மாமா தானே எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார்.
44 வயதில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது.. நடிகை திரிஷா போஸ்ட்.. அவரின் கமெண்ட் கவனிச்சீங்களா?
பிறகு நிஷா சிம்ரனுடன் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். அப்போது சிம்ரன் உன்னுடைய ஆசை என்ன என்று கேட்க டாக்டர் ஆக வேண்டும் என்று சொன்னதும், சிம்ரன் டான்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும் உன்னுடைய கனவுக்கு தகுந்த மாதிரி படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும், அதற்கு என் என்னிடம் எதுவென்றாலும் கேள் என்று சொல்லி இருக்கிறார்.
சிம்ரனை பாராட்டும் ரசிகர்கள்
பிறகு இருவரும் ஒரு வீடியோவிற்கு டான்ஸ் ஆடி இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அந்த சிறுமிக்காக சைக்கிள் ஒன்றையும் சிம்ரன் பரிசாக கொடுத்திருக்கிறார். அதை பார்த்ததும் அந்த சிறுமிக்கு எமோஷனல் ஆகி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் நிஜ வாழ்க்கையிலும் தேவதை, இதுதான் உண்மையான மனிதநேயம்... ஒரு குழந்தையின் கனவு நினைவாகி இருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

தன்னம்பிக்கை வாழ்க்கை
அந்த சிறுமி நிஷாவின் வாழ்க்கை அவ்வளவு எளிதையானது அல்ல. பிறக்கும் போதே ஒரு கையுடன் பிறந்ததால் அவருடைய தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நிஷாவின் அம்மா இரவு பகலும் உழைத்து மகளை வளர்த்து வருகிறார். எத்தனையோ கஷ்டங்கள், கேலி அவமானங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தன்னம்பிக்கையுடன் அந்த குழந்தை நிஷா முன்னேறி வருகிறார். அவருக்கு இதே போல சமூகத்திலும் பலரும் உதவ வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
