44 வயதில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது.. நடிகை திரிஷா போஸ்ட்.. அவரின் கமெண்ட் கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை திரிஷா சோஷியல் மீடியாவில் என்ன பதிவு வெளியிட்டாலும் அது பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. அதேபோலத்தான் இப்போது கூட அவர் பகிர்ந்த ஒரு ஸ்டோரி சோஷியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது தன்னுடைய இன்ஸ்டா பதிவில் 44 வயதில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது என்று ஒரு வீடியோவை திரிஷா பகிர்ந்து இருக்கிறார்.
சமீப காலமாக திரிஷா படங்களில் நடித்து பிரபலமாக இருப்பதை விடவும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். அதுபோல அவருடைய சோசியல் மீடியா போஸ்ட் பார்ப்பதற்காகவும் அதிகமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்று என்ன தான் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் சிலர் இருக்கிறார்கள். அடிக்கடி தன்னுடைய வாழ்க்கைக்கு தகுந்த மாதிரியான வீடியோக்கள் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து வருவார்.

மோட்டிவேஷன் வீடியோ
சில நேரங்களில் தன்னுடைய நாய்களின் வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் இப்போது வெளியிட்ட ஒரு பதிவில் வயது அதிகரிப்பு மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி குறித்து பிரபல சோசியல் மீடியா பிரபலமான ஓபரா வின்ஃபிரே பேசிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல திரிஷா பகிர்ந்து இருக்கிறார்.
அதில் ஓப்ரா வின்ஃபிரேவிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்க 30 வயதுக்கு திரும்புவீங்களா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் 30 வயதுக்கு நான் திரும்ப விரும்பவில்லை. மாறாக 44 வயதுக்கு திரும்ப விரும்புகிறேன், காரணம் உண்மையில் வாழ்க்கை 44 வயதில் தான் தொடங்குகிறது என்கிறார்.
திரிஷாவின் போஸ்ட்
அதோடு பொதுவாக 44 வயதில் தான் நீங்கள் உங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணம் குறையும். எனது 44வது வயதில் தான் நான் எனது நோக்கத்தை தெளிவாக உணர்ந்தேன். பிறருக்காக வேலை செய்வதை விடுத்து எனக்காகவும் என் இலக்குக்காகவும் வாழ ஆரம்பித்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

திரிஷாவின் கமெண்ட்
இந்த வீடியோவை தான் திரிஷா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு "ஆமென்" என்ற ஒரு கமெண்ட் மட்டும் கூடுதலாக சேர்த்து பதிவிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் திரிஷாவுக்கு என்ன ஆச்சு? எதனால் இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு சிலர் திரிஷா எப்போதும் பகிர்ந்து வருவது போல இதுவும் ஒரு பாசிட்டிவான மோட்டிவேஷன் தான் என்று சொல்ல, இன்னும் ஒரு சிலர் அதற்கு வாய்ப்பு இருந்த மாதிரி தெரியவில்லை என்று கூறுகிறார்கள். ஏற்கனவே திரிஷாவுக்கும் அவருடைய நண்பர் விஜய்க்கும் ஏதோ கருத்து வேறுபாடு என்று சொல்கிறார்களே அதற்காக கூட இதுபோல போஸ்ட் போட்டு இருக்கிறாரா? என்றும் கமெண்ட் கொடுக்கிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
காரணம் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளின் போது திரிஷா விஜய்யுடன் எடுத்த எந்த புகைப்படத்தையும் வெளியிடக்கூடாது என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். ஏற்கனவே விஜயின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் திரிஷா போஸ்ட் போடுவது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் அவரும் விஜயின் பிறந்தநாள் அன்று எந்த போஸ்டும் போடாமல் இருந்தார். ஆனால் அடுத்த நாள் ஒரு போட்டோ வெளியிட்டு இருந்தார். அது ஏஐ போட்டோவா? ஒரிஜினலா? என்ற குழப்பம் இப்போதும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
விஜய் ஆட்சி அத்திப்பழ புழு மாதிரி தான்... ஏனென்றால், ஜேம்ஸ் வசந்தன் விளாசல்.. வந்தாச்சு பஞ்சாயத்து!
மேலும் விஜய் உடன் சில திருமண நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர் அஜித்தின் அம்மா இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்றது கூட அதிகமாக பேசப்பட்டது. அதனால் திரிஷா விஜய்யை விட்டு தள்ளி இருந்தால் நல்லது என்று விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக பேசி வந்த நிலையில் இப்போது திரிஷா இதுபோன்று விரக்தியாக போஸ்ட் போட்டு இருக்கிறாரா? என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
