சிவரஞ்சனி வீட்டில் இன்னொரு ஹீரோ வந்துட்டாரு.. குழந்தையை கீழேகூட விடலயாமே.. பாசக்கார பிள்ளைங்க
சென்னை: நடிகை சிவரஞ்சினியின் மகன் தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறாராம்.. தன்னுடைய 3 பிள்ளைகள் குறித்து, சிவரஞ்சனி தந்திருக்கும் பேட்டி ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இவரது கணவர் யார் தெரியுமா?
நடிகை சிவரஞ்சனி கன்னட படம் மூலம் சினிமாவில் என்ட்ரி தந்தவர்.. இதற்கு பிறகு தமிழ் சினிமாவில் காலடி தந்து, கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், அரவிந்த்சாமி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்..

வாரிசு படம்: சிவரஞ்சனியின் கண்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இப்போதும் உண்டு.. 80களிலேயே ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "வாரிசு" படத்தில் மூத்த அண்ணனாக நடித்த நடிகர் தான் ஸ்ரீகாந்த் ஆவார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார் சிவரஞ்சனி.. எனினும் அவ்வப்போது, பேட்டிகளை தந்து வருகிறார். சமீபத்தில்கூட, விகடன் சேனலுக்கு பிரத்யேக பேட்டி தந்திருந்தார். அதில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் பற்றி பேசியிருந்தார்..
அதில், மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், முரளி இருவரை பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார்.. குறிப்பாக, முரளி மிகச்சிறந்த நடிகர், அவருடன் நடிக்கும்போது, எனக்கு பல டிப்ஸ்களை தந்தார்.. அருமையான மனிதர்" என்று சிவரஞ்சனி கூறியிருந்தார்.
டைரக்டர்: அதேபோல, "தொடர்ந்து நான் ஷூட்டிங்கில் இருந்ததால், நேரமின்மை பிரச்சனை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியை தீர்க்க உதவியவர் நடிகர் விஜயகாந்த்.. டைரக்டருடன் பேசி எனக்கு உதவியாக இருந்தார்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். அதுமட்டுமல்ல, அஞ்சு கெஜம் காஞ்சி பட்டு, மெதுவா தந்தி அடிச்சானே, இருக்கஞ்செடி ஓரம் இறுக்கி புடிச்ச என் மாமா, போன்ற பாடல்கள் இப்போதும் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், சிவரஞ்சினியின் பேட்டி மீண்டும் ஒளிபரப்பாகியிருக்கிறது.. அதில் அவர் தன்னுடைய பிள்ளைகளை பற்றி கூறியிருக்கிறார்.. அதில், "24 வயதில், எனக்கு பெரிய மகன் பிறந்தான்..
முதல் குழந்தை: முதல் குழந்தை என்பதால், கீழேகூட நான் அவனை இறக்கி விட்டதில்லை.. ஏதாவது குழந்தைக்கு ஆகிவிடுமோ என்று பயந்துட்டே இருப்பேன்.. 3 குழந்தைகளையுமே நான்தான் கவனித்து கொண்டேன்.. என் கணவருக்கு பாசத்தை வெளிப்படுத்த தெரியாது.. ஆனால், குழந்தைகளுக்கு ஏதாவது என்றால், துடிதுடித்து போய்விடுவார்.
எவ்வளவுதான் ஃபிரண்ட்டிலியா இருந்தாலும், அம்மாகிட்ட எது சொன்னால் நடக்கும்? அப்பா கிட்ட எது சொன்னால் நடக்கும்? என்பதில் தெளிவாக இருப்பாங்க.. ஆனால், அவங்கப்பாவை ஈஸியா ஏமாத்திடுவாங்க.. சின்ன குழந்தைகளாக இருக்கும்போது, என்னுடைய தெலுங்கு படங்களை பார்த்தாங்க.. இப்போ 3 பேருமே தமிழ் நல்லா பேசுவாங்க.. நான் நடித்த தமிழ் படங்களை அதிகமாக விரும்பி பார்க்கிறாங்க. அதிலும் அவர்கள் கமல் ஃபேன் வேற..
அண்ணன் - தம்பி: ரோகன் என்பது 2வது மகனின் பெயர்.. என்னுடைய முதல்பையன் ரோஷன்தான், ரோகன் என்ற பெயரை வைத்தான்.. அவனுடைய நண்பன் பெயர் ரோகன் என்பதால், இந்த பெயரை தன்னுடைய தம்பிக்கு வைத்தான்.. இருவருக்கும் 10 வயசு வித்தியாசம்.. என் மகன் ரோஷனுக்கு சின்ன வயசிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தது.. அதுக்கேத்த மாதிரி வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிடுச்சு.. இப்பவும் தொடர்ந்து படம் பண்ணிட்டு இருக்கான்" என்று தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications