சிலர் மனசில் இவ்வளவு அழுக்கு! முன்னேற விடாமல் தடுக்குறாங்க! மனம் நொந்து பேசிய சினேகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சினேகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் ஒரு நபர் பல நடிகைகள் புதியதாக பொட்டிக் மற்றும் பிசினஸ் செய்வது குறித்து கேள்வி கேட்டபோது, சினேகா மனம் நொந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

90s காலகட்டத்தில் தொடங்கி இப்போ வரைக்கும் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சினேகா சினிமா மட்டுமல்லாமல் பிசினஸிலும் கொடி கட்டி பறந்து வருகிறார். சமீபத்தில் புதியதாக துணிக்கடைகளையும் தொடங்கி அதிலும் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்.

zee tamil sneha entertainment

நடிகை சினேகா 43 வயதானாலும் இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு போட்டியாக கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு வசீகரா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சினிமா துறையில் எத்தனையோ பேர் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில தான் மகிழ்ச்சியாக தங்களுடைய குடும்ப வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை சினேகாவும் ஒருவர். அவர் நடிகர் பிரசன்னாவை காதலுக்கு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகள் பிறந்த பிறகு ஒரு சில நடிகைகளுக்கு மட்டும்தான் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் சினேகாவும் முன்னணி இடத்தில் இருக்கிறார்.

தொடர்ச்சியாக இவர் சினிமாவில் நடித்து வரும்போது பிசினஸிலும் கவனம் ஈர்த்து வருவது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதில் மேடம் சமீபத்தில் சில நடிகைகள் வாய்ப்பு சரியாக இல்லாத போது பொட்டிக் போன்ற இன்னொரு பிசினஸில் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு டக்கென்று கோபமான சினேகா, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மட்டும்தான் பிசினஸ் செய்ய வேண்டுமா? இது என்ன பேச்சு? ஒரு பெண் பிசினஸ் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்றால் அவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம், அவரது முயற்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்.

ஆனால் சமீப சிலர் இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்க இவங்க ஏன் இதெல்லாம் செய்தாங்க என்று விமர்சிக்கிறாங்க. சிலருடைய மனதில் அழுக்கு நிறைந்து இருக்கு. இது பார்க்க வேதனையா இருக்கு. இனி உள்ள ஜென்ரேஷனிலாவது அதில் நம்மைப் போல அடுத்தவர்களும் முன்னேற வேண்டும், நல்லா இருக்க வேண்டும் என்று பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இனி உலகத்தில் வரவண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கையெடுத்து கும்பிட்டபடி அந்த நபருக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். இது குறித்து இணையத்தில் பலரும் சினேகாவை பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+