நண்பர்களே தப்பா நடந்துகிட்டாங்க! தூக்கம் வராம குடிக்கு அடிமையாகி! கோவை சரளா செய்த செயல்.. சோனா ஓபன்
சென்னை: நடிகை சோனா சமீபத்தில் பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் குறித்து அவர் பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதிலும் தன்னுடைய நண்பர்களே தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்றும், நான் தூக்கம் வராமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன் என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
சினிமாவில் திறமையும் உழைப்பும் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் எல்லோருக்கும் வெற்றி கிடைத்து விடுவது கிடையாது. அதுபோலத்தான் ஆரம்பத்தில் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான சோனாவின் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. சோனா ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தாலும் பிறகு கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

வெளிப்படையான பேச்சு
அதற்கு காரணம் தன்னுடைய குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகளால் நான் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு தான் என்று சோனா பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதுபோல மனதில் பட்டதை பட்டு பட்டு என பேசிவிடும் சோனா சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கையில் தனக்கு நடந்த அவலங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் சோனா பேசுகையில் நான் நிறைய பேரை நம்பி ஏமாந்து போயிருக்கிறேன்.
துரோகத்தின் உச்சம்
நண்பர்களாக இருப்பார்கள் ஆனால் கடைசியில் அவர்களுடைய சுயரூபம் கொடூரமாக இருக்கும். அதை நான் தெரிந்து கொண்டபோது அடுத்தவர்களை நம்ப கூடாது என்ற ஒரு மனநிலைக்கு வந்துவிட்டேன். என்னோடு பல வருடங்களாக இருந்த நண்பர்களே என்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள். அதை நான் எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் இருந்தேன். அப்போது அவர்கள் தாங்கள் செய்த தப்பு குறித்து ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை.

நண்பர்கள் செய்த மோசம்
ஒரு முறை என்னுடைய நண்பர்களோடு நான் வெளியே போயிருந்த நிலையில் சிலர் குடித்திருந்தார்கள். அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள். அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அதை செய்வதற்கு முன்வரவில்லை. அதனால் நான் அவர்கள் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தேன், பிறகு மன்னிப்பு கேட்டார்கள்.
அட்ஜஸ்டமென்ட் பிரச்சனை
அதுபோல சினிமா வாய்ப்புகள் சில வருடங்களாக எனக்கு இல்லாமல் போனது. காரணம் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அதிகமாக இருந்தது. அதனால் நான் பல படங்களில் இருந்து பாதியிலேயே ஓடி வந்திருக்கிறேன். அந்த நேரத்தில் தான் தூக்கம் வராமல் தவித்தேன். அப்போது நான் குடிக்கு அடிமையாகி விட்டேன். இரவு தூங்குவதற்காக சரக்கு அடித்தால் தான் முடியும் என்ற நிலைக்கு போனேன் அதற்கு காரணம் நான் அதிகமாக ஏமாற்றங்களை சந்தித்தது தான்.

கோவை சரளா செய்த உதவி
நான் தனியாக வீட்டில் இருக்கும் போது எனக்கு ஏற்படும் கோபம் குழப்பம் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே இருப்பேன். பிறகு அந்த புத்தகத்தை கிழித்து எரிந்து விடுவேன். இப்போ அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது எனக்கே சிரிப்பாக இருக்கிறது. அதுபோல நான் இனி சினிமா சரிப்பட்டு வராது என்று பிசினஸ் தொடங்கலாம் என்று நினைத்தேன் அப்போது எனக்கு கோவை சரளா மேடம் தான் ஹெல்ப் பண்ணுனாங்க.
இப்போதுள்ள நடிகைகள்
அவங்களுக்கு பெரியதாக விஷயம் தெரியவில்லை என்றாலும் நான் எப்போது அவர்களிடம் எந்த சந்தேகம் கேட்டாலும் அவர்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்லி தருவாங்க. 80ஸ் நடிகைகள், நடிகர்கள் எல்லோரும் அப்போது இருந்தே அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் இப்போது உள்ளவர்கள் எல்லாம் அப்படி இருக்கிறார்களா? என்றால் கேள்விகுறி தான் என்று அந்த பேட்டியில் சோனா பேசியிருக்கிறார்.
-
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications